சென்னை : பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 135 சத்துணவுப் பணியாளர்கள், இறுதியாக தேர்வாகி உள்ளனர். அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்கும் வகையில், கடந்த நவம்பர் 27ம் தேதி சிறப்பு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. 341 பேரை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வில், 136 பேர் தேர்ச்சி பெற்றதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி, கடந்த 6ம் தேதி நடந்தது. சான்றிதழ் பிரச்னை காரணமாக, ஒருவரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது. இறுதியாக, மீதமுள்ள 135 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடுகிறது. இவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள், பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.
Thanks: Dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக