கள்ளர் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் இன்று துவக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில், 285 அரசு கள்ளர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாவட்டத்திற்கு ஐந்து அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிகள் வீதம், 15 பள்ளிகளில், இன்று முதல் எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.
தேனி மாவட்டத்தில், முத்தனம்பட்டி, ஏத்தக்கோவில், மார்க்கையன்கோட்டை, ராஜதானி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் எல்.கே.ஜி., - யூ.கே.ஜி.,வகுப்புகள் துவக்கப்படுகின்றன. பிற பள்ளிகளிலும் விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கள்ளர் பள்ளிகள் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.
Source: Dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக