சிவகங்கை : காளையார்கோவில் அருகே தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் இறந்தார். சிவகங்கை மாவட்டம்,பள்ளித்தம்பத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ், 52. சிவகங்கை உதவி தொடக்க கல்வி அலுவலராக உள்ளார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு, பள்ளித்தம்பத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். கிணறு அருகே சென்றபோது, கால்தவறி கிணற்றிற்குள் விழுந்தார். சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் வீரர்கள், உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக