பணியாளர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பு, அவர்களிடம் குற்றச்சாட்டு குறித்து விளக் கம் கேட்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு எதிராக தரப்பட்ட மெமோவை ரத்து செய்து உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவ ட்டம், நட்டலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் லலிதா பாய். 20 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவர், கடந்த 2006 ஜூன் 22ம் தேதி பள்ளிக்குச் சென்று, அங்குள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார். மறுநாள் வருகைப் பதிவேட்டை அவர் பார்க்கும்போது, அதில் அவர் முன்தினம் கையெழுத்திட்டது அழிக்கப்பட்டு, சம்பளத்துடன் விடுமுறை என்று (சி.எல்) என்று சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது.இதுகுறித்து, தலைமை ஆசிரியையிடம் லலிதா பாய் புகார் செய்தார். ஆனால், புகார் தொடர்பாக 4 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் தலைமை ஆசிரியை எடுக்கவில்லை. இதையடுத்து, நாகர்கோவில் முதன்மை கல்வி அலுவலரிடம் லலி தா பாய் புகார் செய்தார். ஆனால், அந்த புகாரை நிராகரித்த முதன்மை கல்வி அலுவலர், லலிதா பாய்க்கு டிசம்பர் 2006ல் சார்ஜ் மெமோ கொடு த்தார். தலைமை ஆசிரியையிடம் புகார் கொடுக்கவில்லை என்றும், லலிதா பாய் மீது தலைமை ஆசிரியர் அனுப்பிய 2 புகார்கள் ஏற்கனவே வந்துள்ளதாகவும், அதன் மீது தான் சார்ஜ் மெமோ கொடுத்ததாகவும், முதன்மை கல்வி அதிகாரி தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து, தனக்கு தரப்பட்ட சார்ஜ் மெ மோவை ரத்து செய்யக் கோரி லலிதா பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனபாலன் அளித்த உத்தரவு வருமாறு: மாநில அரசுத் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் யாராக இருந்தாலும், அவர்களை தண்டிப்பதற்கு முன்பு அவர்கள் தரப்பில் விள க்கம் தர வாய்ப்பு அளிக்க வேண்டும். விளக்கத்து டன் அவர்கள் தரும் மனு வை, தண்டனை வழங்குவதற்கு முன்பு அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அப்போதுதான், இருதரப்பையும் விசாரித்து தக்க முடிவை எடுக்க முடியும்.ஒருவருக்கு தண்டனை தருவதால் அவரின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு விளக்கம் தர வாய்ப்பு எதுவும் தரவில்லை.அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தண்டனை தரக்கூடிய அளவிலான எந்த ஆவணங்களும் இல்லை. இதுபோன்று தண்டனை தரும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது. எனவே, மனுதாரருக்கு எதிராக தரப்பட்ட சார்ஜ் மெமோ ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அந்த தீர் ப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக