தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், வரி கழிவுக்கான சேமிப்பு உச்சவரம்பை ரூ.2 1/2 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்துள்ளது.
கடந்த 1961-ம் ஆண்டில் இருந்து அமலில் இருக்கும் வருமான வரி சட்டத்துக்கு பதிலாக நேரடி வரிகள் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான நேரடி வரிகள் சட்ட மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பா.ஜனதா எம்.பி. யஷ்வந்த் சின்கா தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், குழுவின் சிபாரிசுகள் இறுதி செய்யப்பட்டன. தற்போது, குழுவின் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மத்திய பட்ஜெட், 16-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்பு, அதாவது இன்னும் ஒரு வாரத்துக்குள், பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த நிலைக்குழுவின் சிபாரிசு விவரங்கள் தெரிய வந்துள்ளன. அதன்படி, தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பை தற்போதைய ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.
உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று குழு உறுப்பினர்கள் சிலர் யோசனை தெரிவித்து இருந்தனர். ஆனால் அதற்கு நிலைக்குழுவில் உடன்பாடு ஏற்படவில்லை. ரூ.3 லட்சமாக உயர்த்துவதற்குத்தான் ஒருமித்த கருத்து ஏற்பட்டது.
மேலும், ஆயுள் காப்பீடு, சேமநல நிதி, பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றில் ரூ.1 லட்சம் வரையான சேமிப்புக்கும், உள்கட்டமைப்பு பத்திரங்கள் மீது ரூ.20 ஆயிரம் வரையான சேமிப்புக்கும் வரிக்கழிவு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிக்கழிவு உச்சவரம்பை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து ரூ.21/2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் நிலைக்குழு சிபாரிசு செய்துள்ளது.
தனிநபர் வருமான வரிவிகிதங்கள், 10 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்ற மூன்று வகையிலேயே இருக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது. கார்ப்பரேட் வரி விகிதம் 30 சதவீதமாக நீடிக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக