தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் +2 தேர்வு வரும் 8ம் தேதி முதல் துவங்குகின்றது. இதில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளது. இதற்காக 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மாணவர்களின் போட்டோக்கள் ஒட்டுப்பட்ட ஹால் டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுதும் மாணவரின் போட்டோவை நீக்கிவிட்டு வேறு போட்டோ வைத்து ஆளுமாற்றம் செய்யும் சம்பவங்கள் நடைபெற்றன.
இதனை தவிர்க்க இந்த ஆண்டு முதல் +2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட்களில் ஸ்கேன் செய்த போட்டோக்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆள்மாற்றம் செய்வது தவிர்க்கப்படும்.
இந்த ஆண்டு முதல் அறிமுகப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு முதல் +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக