தமிழகத்தில், பரவலான அளவில், பள்ளிகளில், கணினி வழிக் கல்வியை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள்;
* அடுத்த 5 ஆண்டு காலங்களில், 1880 மேல்நிலைப் பள்ளிகள், 461 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 2341 பள்ளிகளில், கணினி வழிக் கல்வித் திட்டம் பூட் முறையில் செயல்படுத்தப்படும்.
* இத்திட்டத்திற்காக, முதல் தவணையாக 31 கோடியே, 21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையம், பெரியகுளம், விருதுநகர் மாவட்டம் வீரசோழன், பழனி மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் ஆகிய ஊர்களிலுள்ள 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1 கோடியே 25 லட்சம் செலவில் ஸ்மார்ட் பள்ளிகள் நிறுவப்படும்.
* இதற்கடுத்த நடவடிக்கையாக, அதே 1 கோடியே 25 லட்சம் செலவில், திருச்சி மாவட்டத்திலுள்ள அயிலாப்பேட்டை, திருச்செந்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை மற்றும் இனாம்குளத்தூர் ஆகிய இடங்களிலுள்ள 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் பள்ளிகள் தொடங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
* மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க, பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும்பொருட்டு, தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
* நடுநிலைப் பள்ளி என்பதிலிருந்து, உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனைக் கூடங்களைப் பராமரிக்க தேவையான 544 ஆய்வக உதவியாளர் பணிகளும், அலுவல் பணிகளை மேற்கொள்ள, தேவையான 344 அளவு இளநிலை உதவியாளர் பணிகளும் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக