சென்னை: டி.இ.டி., தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 2 தேர்வுக்கு முன்னதாக, டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது: முதல் முறை என்பதால், இந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் தேர்வு நடக்கிறது. அடுத்த ஆண்டு முதல், டிசம்பரில் அறிவிப்பை வெளியிட்டு, ஜனவரி, அல்லது பிப்ரவரிக்குள், டி.இ.டி., தேர்வு நடத்தி முடிக்கப்படும். மேலும், ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட மாதத்தில், நிரந்தரமாக தேர்வு நடக்கவும் வழிவகை செய்யப்படும்.
25 நாட்களுக்குள் முடிவு...
ஒரு முறை தேர்வெழுதி தேர்ச்சி பெற்றால், அது ஏழு ஆண்டுகளுக்கு செல்லும் என, கட்டாயக் கல்வி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், ஒரு முறை தேர்வெழுதி, குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் (பட்டதாரி ஆசிரியர்கள்), மதிப்பெண்களை உயர்த்தும் வகையில், மீண்டும் தேர்வு எழுதினால், அவர்கள் இரண்டாவதாக பெறும் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தேர்வு நடந்து, 25 நாட்களுக்குள் முடிவுகளை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள், ஜூன் இறுதிக்குள் வெளியிடப்படும். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.
கூடுதல் பாடப் புத்தகங்கள்
இவ்வாண்டு முதல் முறை என்பதால், 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத உள்ளனர். ஆனால், அடுத்த ஆண்டு முதல், புதிதாக படிப்பை முடித்து வெளியேறியவர்கள்; மதிப்பெண்களை உயர்த்தும் திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுதக்கூடும். எனவே, இந்த எண்ணிக்கை, படிப்படியாக குறையலாம். இவர்கள் அனைவருக்கும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் தேவைப்படும்.
எனவே, இவர்களை கணக்கில் கொண்டு, ஆண்டுதோறும், கூடுதல் பாடப் புத்தகங்களை அச்சிட, பாடநூல் கழகம் திட்டமிட்டு உள்ளது. வகுப்பு வாரியாக, தலா இரண்டு லட்சம் புத்தகங்கள், கூடுதலாக அச்சிடப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக