சென்னை: பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, 1,065 முதுகலை ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
பள்ளிக் கல்வித் துறையில், 2010-11ம் ஆண்டில், 1,127 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகத்திடம் இருந்து, தகுதியானவர்களின் பெயர் பட்டியலை பெற்று, ஜனவரி, பிப்ரவரியில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இறுதியாக, 1,065 பேரை தேர்வு செய்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இவர்களின் பெயர் பட்டியலை, வாரிய இணையதளத்திலும் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட, சில பிரிவுகளில் தகுதியானவர்கள் கிடைக்காததால், மீதமுள்ள, 62 பேரை தேர்வு செய்ய முடியவில்லை என, தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள், அடுத்த கல்வியாண்டின் துவக்கத்தில் பணியில் சேரும் வகையில், மே இறுதியில் பணி நியமனம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக