மாணவ சேர்க்கைக்கு
இடம் வழங்கும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பெற்றுக் கொள்ள வேண்டும்
என்றும், தாங்கள் குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கை கோர முடியாது என்றும்
சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பிட்ட
பள்ளியில்தான் சேர்க்கை வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த
சென்னை உயர் நீதிமன்றம், அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற சட்டத்தின் கீழ்,
தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க வேண்டும்
என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், தாங்கள்
குறிப்பிட்டு ஒரு பள்ளியில் சேர்க்கை பெற வழிமுறை இல்லை என்றும்,
அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்க அமைப்பு
இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.