திருச்சி : திருச்சியில் ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு
பணியின்போது தேர்வு வாரிய உறுப்பினரை பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று
முற்றுகையிட்டனர்.
கடந்த 2010, 11ம் ஆண்டில் காலியான பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய கடந்த மாதம் 23, 24 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் திருச்சி, புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
வருகை தராதவர்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. 5 மாவட்டங்களை சேர்ந்த 76 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் முதுநிலை தமிழ் ஆசிரியை ஒருவர், பட்டதாரி ஆசிரியர்கள் 16 பேர் என மொத்தம் 17 பேர் பங்கேற்றனர். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சங்கர் தலைமையில் அலுவலர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருந்தனர். சரிபார்ப்பு பணியை பார்வையிட்டுவிட்டு வெளியே வந்த தேர்வு வாரிய உறுப்பினர் சங்கரை வெளியில் காத்திருந்த பட்டதாரிகள் முற்றுகையிட்டனர்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றனர். இதற்கு சங்கர், பதிவுமூப்பு அடிப்படை யில், ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது என்றார். இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், Ô விடுபட்ட ஆசிரியர் பணியிடங்களில் சீனியாரிட்டி மூலம் பணி நியமனம் என்பதால் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதுÕ என்றார்.