நடப்புக்
கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு
தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
முழு
ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும்
வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிஷமும், தேர்வு எண் உள்ளிட்ட
விவரங்களை எழுத 5 நிமிஷமும் வழங்கப்படவுள்ளது. இதனால் தேர்வுகள் காலை 10
மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பிளஸ் 2 தேர்வுகள்
செப்டம்பர் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்புத் தேர்வுகள் செப்டம்பர் 20ம்
தேதி வரையும் நடைபெறவுள்ளன.
இந்தக்
கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம்
முழுவதும் ஒரே தேதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் காலாண்டுத் தேர்வுக்கு
வழங்கப்பட உள்ளது இதுதான் முதல்முறையாகும். ஒரே வினாத்தாள்
தயாரிக்கப்படுவதால் வினாக்கள் தரமுள்ளதாக அமையும் என்பது ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில்
உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத் திட்டப்படி ஒரே மாதிரியான
வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டம் காரணமாக தேர்வுகள சரியாக
எழுத முடியாத நிலை இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையை மாற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வைப்
போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நடத்த தமிழக அரசு முடிவு
செய்திருந்தது. இதன் எதிர்லியாக தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக
காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக