பி.எட்.
ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கான கலந்தாய்வு சென்னை லேடி வில்லிங்டன்
கல்வியியல் கல்லூரியில் இன்று துவங்கியது. அரசு மற்றும் அரசு சார்ந்த 21
கல்லூரிகளுக்கான 2,118 இடங்கள் நிரப்பப்படுவதற்கான கலந்தாய்வு
நடைபெறுகிறது.மொத்தம்
10,386 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு விடுத்துள்ளது. இந்த கலந்தாய்வு
செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கலந்தாய்வில் 237
பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக