பதிவுமூப்பு
அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப்
பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில்,
1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை
ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டது. இந்த தேர்வு தொடர்பாக, ஏற்கனவே ஒரு முடிவு
வெளியிடப்பட்டு, பதிவுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட விளக்கங்கள், விடுபட்ட பதிவுதாரர்கள் என, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பிடித்தனர். 162 பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட சில பிரிவுகளில் பதிவுதாரர்கள் இல்லாததால், இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த தேர்வில் இருந்து, இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக