பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/25/2012

இது காலத்தின் கட்டாயம்!

இந்தியாவில் பின்தங்கியுள்ள 3,200 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து 2,500 ராஷ்ட்ரீய ஆதர்ஷ் வித்யாலயா பள்ளிகளை "அரசு-தனியார் பங்கேற்பு (பிபிபி)' திட்டத்தில் அமைப்பது என்ற அரசின் முயற்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. டாடா, ரிலையன்ஸ், வேதாந்தா, ஐடிசி, ஜிண்டால், ஏர்டெல் என பல நிறுவனங்கள் நாங்கள் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளிகளை அமைப்பதில் அரசுடன் கைகோக்கத் தயார் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு விண்ணப்பம் அளித்துள்ளன.
அனைவருக்கும் கல்விச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளிக்கும் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அதிக நிதி தேவை என்பதால் இதனை "அரசு-தனியார்-பங்கேற்பு' திட்டத்தில் தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி 1,000 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்தியஅரசு இப்பள்ளிகளுக்குச் செலுத்திவிடும். நிர்வாக ஒதுக்கீடாக 1,500 மாணவர்களை, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தின்படி சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி பள்ளிச் செலவுகள் அனைத்தையும் நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். இந்தப் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை பள்ளி நேரம் தவிர்த்த மீதி நேரங்களில் வணிகப் பயன்பாட்டுக்காக, சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய், பள்ளியின் நிர்வாகச் செலவை ஈடுகட்ட உதவும்.
மத்திய அரசு சொல்லும் இந்த விவகாரங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்களின் சம்பளத்தை அரசாங்கம்தான் வழங்குகிறது. பள்ளி மாணவர்கள் இலவசமாகப் படிக்கிறார்கள். இவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் மட்டுமே உண்டு. இலவச பஸ் பாஸ், விலையில்லா சைக்கிள் பெற அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கும் தகுதி உண்டு.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் கல்வித் தரம் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு நிர்வாகம் சொல்லும் காரணம், ஆசிரியர் நியமனங்களை அரசு செய்கிறது. ஆனால், வரும் ஆசிரியர்கள் திறமை இல்லாதவர்கள். இவர்களை இடமாற்றம் செய்ய இயலாது என்பதால் இவர்கள் சங்கம் அமைத்துக்கொண்டு, பாடம் நடத்துவதே இல்லை. ஆகவே எங்களால் கல்வித் தரத்தை நிலைநிறுத்த முடியவில்லை என்பதுதான் நிர்வாகத்தின் குற்றச்சாட்டு.
தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மூலம் பெரும் லாபம் கிடைப்பதில்லை. தனியார் பள்ளிகளைப்போல தன்னிச்சையாகச் செயல்படவும் முடியாது. ஆகவே, நிர்வாகமும் அதிக கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டது. இதுதான் தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கல்வித் தரம் குறையக் காரணம்.
இரண்டாவதாக, தற்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள, தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசு செலுத்தும் திட்டம்.
தற்போது மத்திய அரசு சொல்லும் 1,000:1,500 விகிதாசாரத்தின் படி 40% இடங்கள் ராஷ்ட்ரீய ஆதர்ஷ் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், இந்தி ஒரு பாடமொழியாக இருக்கும் என்பதால் இதை தமிழக அரசியல் கட்சிகள் ராஷ்ட்ரீய ஆதர்ஷ் பள்ளிகளை ஏற்காது. அதனால், மத்திய அரசின் இத்திட்டம் தமிழ்நாட்டில் இடம்பெறுவதேகூடச் சந்தேகம்தான்.
மத்திய அரசினைப் போன்றே தமிழக அரசும் இங்குள்ள தொழில் நிறுவனங்களை அழைத்துப் பேசி, அவர்களது சமூகப் பங்களிப்பாக பள்ளிகளைத் தொடங்க ஊக்கப்படுத்தலாம். 50% ஏழை மாணவர்களை இப்பள்ளிகள் சேர்த்துக்கொள்ளட்டும். மீதமுள்ள 50% மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீடாக இருக்கட்டும். ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், பஸ் பாஸ், இலவச சைக்கிள் ஆகியவற்றை அரசுப் பள்ளிகளைப் போன்றே இங்கும் வழங்கலாம். பள்ளி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் இந்த வளாகத்தை வணிக நோக்கத்தில் பயன்படுத்திக்கொள்ளட்டும். பாடத்திட்டம் தமிழக கல்வித் துறை நிர்ணயிப்பதாக இருக்கட்டும்.
இப்போது ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் பலவற்றிலும் போதுமான மாணவர்கள் சேரவில்லை. ஆனால் இவர்கள் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பொறியியல் கல்லூரிகள் தங்கள் பணி நேரத்தை முற்பகல், பிற்பகல் என்று பிரித்துக்கொண்டு, முற்பகலில் அப்பகுதி மக்களுக்காக உயர்நிலைப் பள்ளியை நடத்த முன்வந்தால், தமிழக அரசு அவர்களுக்கு 50:50 விகிதத்தில் மாணவர் சேர்க்கையை அனுமதித்து, ஏழைமாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்கலாம். இத்தகைய அணுகுமுறை உடனடியாக சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்குத் தரமான பள்ளி வளாகம் மற்றும் கல்விக்கு வாய்ப்பைத் திறந்துவிடும்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கல்வித்தரம் தொடர்ந்து தாழ்ந்துகொண்டே வந்தால், அந்தப் பள்ளிகளை நிதியுதவி பெறும் பள்ளிப் பட்டியலிலிருந்து விடுவித்துவிடலாம். அரசு ஊழியர்களாகிவிட்ட ஒரே காரணத்துக்காகத் தரமற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுவது என்பது வருங்கால சந்ததியினரையே பாழ்படுத்திவிடும். அர்ப்பணிப்புணர்வுடன் தரமான ஆசிரியர்கள் உறுதி செய்யப்படாவிட்டால் அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அரசும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆசிரியர் சமுதாயமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
÷அரசுப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் தரமாகச் செயல்பட வேண்டுமென்றால், அரசு ஊழியர்களும், அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலோ, அரசு உதவி பெறும் பள்ளிகளிலோதான் சேர்த்தாக வேண்டும் என்று ஊழியர் விதிமுறையில் நிபந்தனை சேர்க்கப்பட்டால் மட்டுமே சாத்தியம். அதற்கு இணங்காதவர்கள் அரசுப் பணியில் நீடிக்கக் கூடாது என்பது நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தப் பள்ளிகளில் தரம் தானாக உயர்ந்துவிடும்.
அனைவருக்கும் கல்வி, சிறார் தொழில்முறை ஒழிப்பு ஆகியவற்றால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆகவே ராஷ்ட்ரீய ஆதர்ஷ் பள்ளிகள் போன்ற வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போது தமிழக அரசுக்கு இருக்கிறது.
கடைசியாக ஒரு சந்தேகம். 50 விழுக்காடு இடங்களைக் கட்டண இடங்களாகவும், நன்கொடை இடங்களாகவும் பெறும் கல்வி நிறுவனங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 50% இடங்களுக்கான கட்டணத்தை அரசிடமிருந்து பெறத்தான் வேண்டுமா?
 Dinamani

EMIS

TNPTF நவம்பர் 07 மாநிலம் தழுவிய வட்டார தலைநகர் ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்

10/24/2012

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு

அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000 தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என, இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில், எஸ்.எஸ்.., திட்டம், 2002ல் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், மாவட்ட, ஒன்றிய
அளவில், 5,000 பேர், கட்டட பொறியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கம்ப்யூட்டர் புரோகிராமர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், பணி புரிகின்றனர். இவர்களுக்கு, 6,000 முதல், 13 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப் படுகிறது. 10 ஆண்டுகளாக தொகுப்பூதிய நிலையில் பணிபுரிந்து வரும் இவர்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழக அரசை, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பணி வரன்முறை குறித்த அறிவிப்பை, ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் மற்றும் சட்டசபை கூட்டத்தொடரில், ஊழியர் எதிர்பார்க்கின்றனர்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.
 
இதுகுறித்து, எஸ்.எஸ்.., இயக்கக வட்டாரம் கூறுகையில், ""ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, தொகுப்பூதிய அடிப்படையில், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே, அவர்களை, பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனினும், மத்திய அரசின் வேறு திட்டங்கள் தொடர்ந்து வரும் என்பதால், அவர்களுடைய வேலைவாய்ப்பு பாதிக்காது,'' என, தெரிவித்தன
.

TET - Minority Subject

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

பள்ளிக் கல்விக்கு ரூ.14,552 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

ராஜபாளையம்: "இடைநிற்றல் போன்றவற்றை தடுத்து, பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி ரூபாய் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார்" என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 

ராஜபாளையம் மறவர் மகாசபை விழாவில் அவர் பேசியதாவது: மூன்றாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சி நடத்துகிறார்.தேவர் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தவர் ஜெ.,. கல்வி, வணிகம் இருந்தால் தான் சமூக பொருளாதாரம் முன்னேறும்.
கல்விதுறையில் எண்ணற்ற சலுகைகளை முதல்வர் அறிவித்து வருகிறார். பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி, உயர்கல்விக்கு 2800 கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கி உள்ளார். தமிழகத்தின் தொழில், திட்டம், தொலைநோக்கு பார்வையை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. சபை சார்பில் கல்லூரி நிலம் வாங்கியதாக கூறினார்கள், கல்லூரி பணிகளில் உங்களில் ஒரு ஒஉவனாக இருந்து செயல்படுவேன்" என பேசினார்.
பின்னர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கினார்.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை(NMMS)

பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்பதற்காக, மாணவர்களுக்கான கல்விக் கடனை, வங்கி மறுக்கக் கூடாது' சென்னை ஐகோர்ட் உத்தரவு

வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் அனிதா. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். பெற்றோர், விவசாய வேலை செய்கின்றனர். கர்நாடக மாநிலத்தில், பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர்ந்தார். முதல் ஆண்டு, 92 ஆயிரம், இரண்டாம் ஆண்டு, 74 ஆயிரம், மூன்றாம் ஆண்டு, 74 ஆயிரம், இறுதியாண்டில், 74 ஆயிரம், என, மொத்தம், 3 லட்சத்து, 14 ஆயிரம், கட்டணமாக செலுத்த வேண்டும்.
 

ஆம்பூரில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், கல்விக் கடன் கேட்டு, விண்ணப்பித்தார். பள்ளி அளவில், சரியாக படிக்கவில்லை எனக் கூறி, விண்ணப்பத்தை, வங்கி பரிசீலிக்கவில்லை. இதையடுத்து, ஐகோர்ட்டில், அனிதா தாக்கல் செய்த மனு:
நான், ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள். என் குடும்பத்தில், முதலாவதாக, பட்டப் படிப்புக்கு செல்கிறேன். கூரை வீட்டில் வசிக்கிறோம். மின்சார வசதி இல்லை. இந்தச் சூழ்நிலையில், கஷ்டப்பட்டு, பள்ளிப் படிப்பை முடித்தேன். கல்விக் கடன் கோரிய, எனது விண்ணப்பத்தை பரிசீலிக்காததற்கு, வங்கி கூறும் காரணத்தை ஏற்க முடியாது.கடன் வழங்க மறுத்த, வங்கியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எனக்கு கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் முனுசாமி ஆஜரானார். நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:கல்விக் கடன் திட்டம் குறித்த சுற்றறிக்கையை, வங்கியின் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில், "பள்ளி மட்டத்தில் நன்றாக படித்தால் தான், கல்விக் கடன் வழங்கப்படும்' என, கூறப்படவில்லை. பள்ளி அளவில், சரிவர படிக்கவில்லை என்பதற்காக, கல்விக் கடன் வழங்க, எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

மெட்ரிக்குலேஷன் தேர்வில், டாக்டர் அம்பேத்கர், 750க்கு, 287 மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தார். அவரது கல்விக்கு, பரோடா மன்னர் உதவினார். தனது பெற்றோர், விவசாயத் தொழிலாளி என்றும், அடித்தட்டில் இருந்து வந்திருப்பதாகவும், மாணவி கூறியுள்ளார். இதை, வங்கி தரப்பில் பரிசீலித்திருக்க வேண்டும்.படிப்பில் சேர, குறைந்தபட்ச தகுதியை, மனுதாரர் பெற்றிருக்கவில்லை, என்பது, வங்கி தரப்பு வாதம் அல்ல. பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சேர, அவர் தகுதி பெற்றுள்ளார். எனவே, பள்ளி அளவில், சரிவர படிக்கவில்லை என்பதற்காக, கல்விக் கடனை, வங்கி மறுக்க முடியாது.

பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்காக, கல்விக் கடன் திட்டம் கொண்டு வரப்பட்டது. நான்கு லட்சம் ரூபாய், கடன் பெற, மூன்றாம் நபர் உத்தரவாதம் கூட தேவையில்லை. எனவே, வங்கி மேலாளரின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. நான்கு வாரங்களில், கல்விக் கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்

ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்
ஆங்கிலத்தில் கேள்வித்தாளைத் தயாரித்து தமிழாக்கம் செய்யும்போது ஏகப்பட்ட குளறுபடிகளை செய்து ஆசிரியர்களை குழப்பிவிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.உதாரணமாக குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பகுதியில்
1.பின்வருவனவற்றுள் எது புறத்தேற்று முறையின் கீழ் வராது? என்ற வினாவில் Sentence completion test என்பதை வாக்கியம் நிறைவு செய்தல் சோதனை என்று மொழிபெயர்க்காமல் வெறுமனே வாக்கியம் நிறைவு செய்தல் என்று மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
10.ஒரு தனிநபரின் மிகப்பொருத்தப்பாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன் என்ற வினாவுக்கு நன்கு நிலைபடுத்தப்பட்ட தன்னுணர்வு மனம் என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் தாழ்நிலை மனம்,தன்னுணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே பலமுடன் இருக்கும் நிலை என்பதே மிகச்சரியான விடையாகும்.ஆதாரம்:கற்றல்,மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம். இராம்பதிப்பகம்,சென்னை-93      பேராசிரியர் கி.நாகராஜன் பக்கம்:354
13.வீட்டுப்பாடத்தை வெறுக்கும் குழந்தையினை நேர்மறையாக திருத்த முயல்வது என்ற வினாவுக்கு இருத்தல்-கட்டுப்பாட்டு முறை என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கருவிசார் ஆக்க நிலையிறுத்த முறை என்பதே சரியான விடையாகும். ஆதாரம்:கற்றல்,மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம். இராம்பதிப்பகம்,சென்னை-93      பேராசிரியர் கி.நாகராஜன் பக்கம்:201 இல் நாம் விரும்பும் துலங்கலை வலுவூட்டி,நடத்தையாக ஆக்குதல் என்பதே ஸ்கின்னரின் செயல்படு ஆக்கநிலையிறுத்தத்தின் அடிப்படை சாரமாகும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
16.மனவெழுச்சி காதார்ஸிஸ் என்பது என்ற வினாவில் Emotional catharsis means என்பதை மனக்குமுறல்களை ஆற்றுப்படுத்துதல் என்று மொழிபெயர்க்காமல் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்து ஆசிரியர்களை குழப்பியுள்ளனர்.
23.மனவெழுச்சி நுண்ணறிவுடன் தொடர்புள்ள முக்கிய பெயர் என்ற வினாவுக்கு ஜாக்மேயர்,பீட்டர் ஸலோவே,எஸ்.ஹெயின்,லீப்ரோவேதனி போன்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள எந்த பெயரையும் கொடுக்காமல் டேனியல் கோல்மென் என்றுபுத்தகத்தில் இல்லாத ஒரு தொடர்புடைய பெயரை கொடுத்திருப்பது எந்த விதத்தில் சரி?
25.கற்றல் வளைகோடு இதனை வெளிக்காட்டுகிறது என்ற வினாவுக்கு   Graph representing the learner’s progression with time  என்ற பதிலை கற்போரின் வளர்நிலையைக் குறிக்கிறது என்று மிகக்குழப்பமாக தமிழ் மொழி பெயர்த்துள்ளனர்.கற்றலின் வளர்ச்சியை ஒரு வரைபடமாக காலத்தைக் கொண்டு விளக்குவது கற்றல் வளைகோடு என்று தமிழ்வழியில் படித்த மாணவர்கள் இந்த கேள்விக்கு எப்படி விடை அளிக்க முடியும்?
30.அறிவுசார் வளர்ச்சிப் படிநிலைகளில் குறியீட்டு சமன்பாடுகளை புரிந்துகொள்ளும் நிலை என்ற கேள்விக்கு
A)Sensori-motor stage                  -புலனியக்க நிலை
B)Concrete-operational stage  -பருப்பொருள் நிலை 
C)Pre-operational stage          -செயலுக்கு முற்பட்ட நிலை
D)Formal-operational stage  -கருத்தியல் நிலை                                 என்று புத்தகத்திலுள்ளவாறு மொழிபெயர்த்திருந்தால் எளிமையாக விடை அளித்திருக்க முடியும்.
தமிழ்
ஒன்று முதல் பத்தாம்வகுப்பு புத்தகங்களை படித்தால் போதும் என்று கூறிய ஆசிரியர் தேர்வுவாரியம் தமிழுக்கான வினாக்களை எந்த புத்தகங்களில் இருந்துதான் கேட்டார்களோ என்று குழம்பும் அளவுக்கு பத்தாம் வகுப்பு புத்தகங்களை தாண்டி மேல்நிலை வகுப்புகளில் அதிக அளவு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
58.கோட்டுகிர் குருளை என்றழைக்கப்படுவது என்ற வினாவிற்கு மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பக்கம் 14 இல் ஊன்பொதியவிழாக் கோட்டுகிர்க் குருளை அதாவது நகங்கள் தசைப்பகுதியிலிருந்து வெளிவராத புலியின் குருளை என்று பொருள் உள்ளது.ஆனால் எட்டாம் வகுப்பு தமிழ் 63ஆம் பக்கத்தில் இளமைப்பெயர்களில் புலிக்கு புலிப்பறழ், சிங்கத்துக்கு சிங்கக்குருளை என்று உள்ளது.எனவே சரியான விடை சிங்கம் மற்றும் புலி இரண்டும் ஆகும்.
ஆங்கிலம்
ஆங்கிலத்தில்74வது வினாவான Identify the correct characteristic என்ற கேள்விக்கு Validity என்று கொடுக்கப்பட்டுள்ளது. Reliability , Validity இரண்டுமே சரியான விடைகள்.
சமூக அறிவியல்
111.சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது என்ற வினாவுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க எண்:80இல் சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது பாஸ்பரஸ் சுழற்சி என்று  கொடுக்கப்பட்டுள்ளது.
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்-139 இல்
நீர் சுழற்சி என்பது நீர் நிலத்திலிருந்து வளிமண்டலத்தை அடைந்து மீண்டும் நிலத்தை அடையும் செயலாகும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
112.வளிமண்டலத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 5 என்று உள்ளது.ஆனால் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பக்கம் 105இல் வளிமண்டலத்தினை அதன் பண்புகளின் அடிப்படையில் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது.1.அடியடுக்கு(Troposphere) 2.படையடுக்கு(Stratosphere) 3.அயனியடுக்கு(Ionosphere) 4.வெளியடுக்கு(Exosphere) மேலும்,5.சேணிடை அடுக்கு(Tropopause) என்ற மெல்லிய அடுக்கானது அடியடுக்கு மற்றும் படையடுக்கு இவைகளுக்கிடையே அமைந்துள்ளது. படையடுக்கினை தொடர்ந்து மீண்டும் ஒரு மெல்லிய அடுக்கு காணப்படுகிறது.இது 6.மீவளி இடையடுக்கு(Stratopause)என அழைக்கப்படுகிறது. ஆகமொத்தம் 6அடுக்குகள் என்பதே மிகச்சரியான விடையாகும்.ஆனால் மேல்நிலை முதலாம் ஆண்டு பக்க எண்:64 இல் 5 என்று உள்ளது.
128.தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி எனப்படுவது என்ற வினாவுக்கு எரிசக்தி என விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் பொருளியலில் மனிதனால் உருவாக்கப்படாத அனைத்து பொருட்களும் நிலம் என்றழைக்கப்படுகிறது.நிலம் தானாக எதையும் உற்பத்தி செய்ய முடியாது.மனிதன் நிலத்தில் உழைத்து பண்டங்களையும்,பணிகளையும் உற்பத்தி செய்கிறான். “Labour is the active and initial force and labour is therefore the employer of capital” ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்:181
தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள்,பணியாளர்கள்,எரிபொருள்,மூலதனம், போக்குவரத்து,சந்தை அனைத்துமே உயிர்நாடிதான்.அப்படியிருக்க எரிசக்தி மட்டுமே தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி என்று எப்படிக்கூற முடியும்? எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்:130
ஆனால் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பக்க எண்:75 இல் எரிசக்தி என்று உள்ளது
113.ஒரு சூழலில் உள்ள நீரோட்டங்கள் என்ற வினாவுக்கு நான்கு என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பக்க எண்:141இல் பேராழிநீரோட்டங்கள் இரண்டு வகைப்படும்.அவைகள் வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் ஆகும் என்று உள்ளது.
மேல்நிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க எண்:50இல்
மூன்று பெருங்கடல்களுக்கும் கண்டங்கள் எல்லைகளாக அமைந்திருக்கின்றன.இவை நீரோட்டங்களின் பாதைகளில் தடைகளாக அமைவது மட்டுமன்றி அந்நீரோட்டங்கள் ஏறக்குறைய வட்ட வடிவில் சுழலவும் காரணமாக அமைகின்றன.இத்தகைய சுழல்தோற்றங்களை பெருங்கடல் சுழல்கள்(OCEAN GYRES) என அழைக்கிறோம்.மேலும் ஒரு சுழலில் நான்கு நீரோட்டங்கள் அமைந்துள்ளன.என்று உள்ளது.
பெருங்கடல் சுழலில் உள்ள நீரோட்டங்கள் என்று கேட்பதற்கு பதிலாக ஒரு சூழலில் உள்ள நீரோட்டங்கள் என்று தவறாக வினா கேட்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து பணியிடங்களையும் விரைவாக நிரப்பப்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வி இயக்குநர்

10/22/2012

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் நாளை வெளியீடு:  மாநிலம் முழுவதும் 2,895  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்காக கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், அனைத்து விடைத்தாள்களும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தேர்வர்கள் சமர்ப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்

விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tn@nic.in என்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம். 
ஆசிரியர் தகுதி மறுதேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான சரியான விடைகள் மேற்கண்ட இணையதளத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 22) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முன்பணம் சொற்பம்: அரசு ஊழியர் தயக்கம்

அரசிடம் இருந்து தீபாவளி முன் பணமாக 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ள அரசு ஊழியர்களும், போலீசாரும் தயக்கம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு, அரசு ஊழியர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை மாதம் 200 ரூபாய் வீதம் 10 தவணைகளில் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்கின்றனர். வழக்கம் போல் நடப்பு ஆண்டும் தீபாவளி முன்பணம் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஊழியர்களும், போலீசாரும் முன்பணம் பெற தயாராக இல்லை.  தேனி மாவட்டத்தை பொறுத்தவரை போலீசார் 5 சதவீதம் பேர் கூட தீபாவளி முன்பணம் பெற விண்ணப்பிக்கவில்லை. கலெக்டர் அலுவலக ஊழியர்களும் முன்பணம் கேட்டு விண்ணப்பிக்காமல் உள்ளனர். போலீசார் கூறியதாவது: கடந்த 1994 ம் ஆண்டு தீபாவளி முன்பணம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என அரசு உத்தரவு வெளியானது. தற்போது அனைத்து பொருட்களும், ஜவுளிகளும் விலை உயர்ந்துள்ள நிலையில் 2 ஆயிரம் ரூபாயில் குடும்பத்தில் ஒருவருக்கு கூட ஜவுளி எடுக்க வாய்ப்பில்லை. இந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். தீபாவளிக்கு ஒரு மாதம் சம்பளத்தையாவது முன்பணமாக வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளோம்,என்றனர்.

கன மழை - இன்று (22.10.2012) சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 

காஞ்சிபுரம் , திண்டுக்கல், திருச்சி, தஞ்சை , விழுப்புரம், கடலூர் , புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்கால், ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, அரியலூர் , சென்னை , நாகை, நீலகிரி, சிவகங்கை   மற்றும் புதுச்சேரி. 

( உங்கள் மாவட்டத்தில் அதிக மழை இருந்ததால் உரிய மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு விடுமுறை அறிவிப்பை அறிந்துகொள்ளுங்கள் . மழை விடுப்பு அறிவிப்புகளுக்கு மாவட்ட ஆட்சியற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது )

எஸ்.எம்.எஸ்

10/21/2012

படிப்புதவித் தொகை

மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.  

 
திட்டத்தின் முதல் கட்டமாக மணியகாரன்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் (ஏ.ஐ.எப்) எனும் அமைப்பின் நிதியுதவியுடன், டிஜிட்டல் ஈக்குவலைசர் எனும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தகட்டமாக பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகளை துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி., வசதியுள்ள இந்த வகுப்பறைகளில் "டெல்' மற்றும் ஏ.ஐ.எப். அமைப்பின் சார்பில் 25 கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், டிஜிட்டல் பிளாக்போர்டு, இன்டெர்நெட் இணைப்பு, புரொஜக்டர் உள்ளிட்ட வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. 
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் கோவை ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் கூறியதாவது: வருங்காலங்களில் கம்ப்யூட்டர் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட நவீன உலகில், மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து வெளியேறும் மாணவர்களும் நிலைத்து நிற்க, அவர்களுக்கும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப அறிவு முக்கியம். 
மாணவர்களின் கம்ப்யூட்டர்கள், ஆசிரியர் வசமுள்ள கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்டர்நெட் இணைப்பை மாணவர்களால் தவறாக பயன்படுத்த முடியாது.
இன்டெர்நெட் இணைப்பு உள்ளதால், பாடம் தொடர்பான தகவல்கள் மற்றும் படங்களை உடனுக்குடன் "டவுன்லோடு' செய்து படிக்கலாம். இதே வசதியுள்ள பிற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன், "வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் பாடம் தொடர்பாக கலந்துரையாடலாம்.
"சாக் அண்டு டாக்' எனும் பழைய கற்பித்தல் முறைக்கும், மனப்பாட கல்வி முறைக்கும் இனி "குட்பை' சொல்லி விடலாம். இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், மீதமுள்ள பள்ளிகளிலும் துவங்கப்படும். 2014 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டம், அதன் பின் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பி.எட்., முடித்த 50 ஆயிரம் பேர் சான்றிதழ் இன்றி தவிப்பு

கடந்த, 2010- 11ம் ஆண்டில், பி.எட்., முடித்த, 50 ஆயிரம் பேர், சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில், 660 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன; இவற்றில், 2010- 11ம் ஆண்டில், 50 ஆயிரம் பேர், பி.எட்., படிப்பை முடித்தனர். இவர்களுக்கு, இதுவரை பட்டம் வழங்கவில்லை.ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மாணவ, மாணவியருக்கு, தற்காலிக சான்றிதழை மட்டும் வழங்கியது.
இந்த சான்றிதழை, உயர் படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பிற்காகவும் பயன்படுத்தலாம்; எனினும், பட்டப் படிப்பு சான்றிதழ் அவசியம். குறிப்பாக, பலர், அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியராக வேலையில் சேர்ந்துள்ளனர். இவர்களின் பணி நியமனத்திற்கு, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் எனில், தற்காலிக சான்றிதழ் மட்டும் போதாது. இதுபோன்ற பிரச்னைகளால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர், வீரமணி கூறுகையில், "பட்டமளிப்பு விழாவிற்கு, ஆளுனரிடம் தேதி கேட்டுள்ளோம். விரைவில், தேதி கிடைத்து விடும். நவம்பருக்குள், பட்டமளிப்பு விழாவை நடத்தி, சான்றிதழை வழங்கி விடுவோம்," என்றார்.

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு நியமன உத்தரவு வழங்க தடை

கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கிராம நிர்வாக அதிகாரிகள், 3,484, பணியிடங்களை நிரப்ப, 2010ம் ஆண்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிந்து, 2011ம் ஆண்டு, ஜூலையில், 2,407 இடங்களுக்கு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களுக்கு, 2011ம் ஆண்டு, செப்டம்பரில், பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 400 பேர், பணியில் சேரவில்லை.
இதையடுத்து, தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு: காலியிடங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமித்திருக்க வேண்டும்.
ஆனால், புதிதாக அறிவிப்பை, அரசு வெளியிட்டுள்ளது. கடந்த, 8ம் தேதி, வெளியிடப்பட்ட பட்டியலில், இடம் பெற்றுள்ள, 41 பேர், முதலில் வெளியிடப்பட்ட பட்டியலிலும் இல்லை. இரண்டாவது பட்டியலிலும் இல்லை. தகுதியற்றவர்களை நியமிக்க, முயற்சிகள் நடக்கின்றன. 
கடந்த 2010ம் ஆண்டு நடந்த தேர்வில், நான் கலந்து கொண்டேன். நான், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவன். பட்டியலில், எனக்கு பின்னால் உள்ளவர்கள், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது. எனக்கு, கிராம நிர்வாக அதிகாரி, பணி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, "தகுதிப் பட்டியலில், முன்னணியில் இருந்தும், மனுதாரரை தேர்ந்தெடுக்காததற்கு, என்ன காரணம், என தெரியவில்லை" என்றார். 
அரசு தரப்பில் பதிலளிக்க, சிறப்பு அரசு பிளீடர் ராஜேஸ்வரன், "நோட்டீஸ்' பெற்றுக் கொண்டார். டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், வழக்கறிஞர் நிறைமதி, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க மாட்டோம், என, உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து, நீதிபதி நாகமுத்து, "ஆதிதிராவிடருக்கான பொது மற்றும் விடுபட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை, வழங்கக் கூடாது" என, உத்தரவிட்டார். விசாரணையை, 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.