தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள்
வருகை குறித்து, பதிவு செய்ய, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி முறையை
அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், காலை
9:30 மணிக்கு, பள்ளிக்கு வந்த ஆசிரியர்களின் வருகை குறித்து, அந்தந்த உதவி
தொடக்க கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ்.
மூலம் தகவல் தெரிவிப்பர். இது கம்ப்யூட்டர் மூலம் ,தானாகவே கல்வி துறை
அலுவலகத்தில் பதிவாகிவிடும்.ராமநாதபுரம்: தமிழகத்தில் அனைத்து
பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் வருகையை,
எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை
அமல்படுத்தப்பட உள்ளது.
ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் வருகை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரி, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள "பாஸ்வேர்ட்&' மூலம் கம்ப்யூட்டரில்
பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதே போல், கல்வி துறை இயக்குனர் வரை
கொடுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட் மூலம், தமிழகத்தில் எந்த ஊரிலும் உள்ள பள்ளி
ஆசிரியர்கள் வருகை குறித்து, சென்னையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
"இம்முறை தற்போது தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் சோதனை செய்யப்பட்டு
வருகிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து, அனைத்து மாவட்டங்களிலும்
நடைமுறைக்கு வரஉள்ளது&' என கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக