சென்னை: குரூப் 2 தேர்வு மீண்டும் தள்ளிப் போவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம். திட்டமிட்டபடி வரும் ஜூலை 30ம் தேதி தேர்வுகள் நடக்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் வரும் ஜூலை 30ம் தேதி நடக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால் இடையில் இந்த தேர்வு தள்ளிப் போய்விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் 104 மையங்களில் ஜுலை மாதம் 30 ந்தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது.
அதன்படி, ஜுலை 30 ந்தேதி அன்று திட்டமிட்டபடி, குரூப் 2 தேர்வு நடைபெறும். இதுதொடர்பாக ஒருசில ஊடகங்களில் வரும் தவறான செய்திகளை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்று அறிவிக்கப்படுகிறது," என்று கூறியுள்ளார்.
இந்தத் தேர்வுக்காக பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக