டெல்லி: இந்தியா முழுவதும் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் இந்த மாதம் 7-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்தம் ஆகஸ்டு 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தகவலை, ஐக்கிய வங்கி ஊழியர்களின் சங்க ஒருங்கிணைப்பாளர் சி.எச். வெங்கடாச்சலம் சென்னையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆகஸ்டு 5-ந் தேதிக்கு வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்திருக்கிறோம்'' என்றார்.
இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் விஷ்வாஸ் உதாகி கூறுகையில், "வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொள்வார்கள்'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக