இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909
தேர்வு எழுதும் மாணவர்கள்; பெயர் பட்டியலில் திருத்தம்
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் வரும்
25க்குள், திருத்தங்கள் செய்து கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதி, பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு துவங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவியரின்
பெயர் பட்டியலில் சில திருத்தங்களை செய்துகொள்ள அனுமதிக்குமாறு சில
பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு விண்ணப்பித்தன. இக்கோரிக்கையை
ஏற்று, மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து,
வரும் 25க்குள் திருத்தங்களை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருத்தங்களை ஆன்-லைன் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்; திருத்தங்கள்
செய்யும்போது, எவ்வித குளறுபடியும் இருக்கக் கூடாது. திருத்தங்கள்
முடிந்தபின், பள்ளிகள் தரப்பில் அதன் தலைமை ஆசிரியர்கள் சான்று அளிக்க
வேண்டும்; மீண்டும், திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட மாட்டாது.
மாணவர்கள் பட்டியலில் செய்யப்பட்ட திருத்தங்களில் ஏதேனும் தவறு இருந்தால்,
அதனால் தேர்வு நேரத்திலோ அல்லது மதிப்பெண் சான்று வழங்கும்போதோ பிரச்னை
ஏற்பட்டால், அதற்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு ஏற்க வேண்டும். அவ்வாறு
பிரச்னை ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
எடுக்கப்படும், என, மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக