தமிழ்நாட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச்செயற்குழு புதுச்சேரி விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார மையத்தில் மாநில்தலைவர் திரு.கண்ணன் தலைமையில் 03.8.2013 அன்று நடந்தது. மாநிலப்பொதுச்செயலாளர்(பொ) திரு. பாலச்சந்தர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாநிலப்பொருளாளர் திரு.மோசஸ் நிதி நிலுவைகள் குறித்து விளக்கினார்கள். எஸ்.டி.எப்.ஐ.ன் அகில இந்திய துணைத்தலைவர் திரு.கணேசன் அவர்கள் மாலை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் மாநில முதல்வர் திரு.ரெங்கசாமி அவர்களால் தொடக்கி வைக்கப்படவுள்ள பெண்களுக்காக - பெண்களைக்காக்க ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்க விழா குறித்து விளக்கி பேசினார்கள். மாநில அலுவலகத்திற்கு அச்சு நகல் இயந்திரம் வாங்குவதற்கு சிவகங்கை மாவட்டச்செயலாளர் திரு. ஆ.தாமஸ் அமலநாதன் அவர்கள் தன் சொந்த நிதியிலிருந்து ரூ25000 வழங்கினார்கள். மாநிலத்துணைத்தலைவர் திரு.ஜோசப் ரோஸ் அவரக்ள நன்றி கூறினார். செயற்குழுவில் கீழ்கண்ட போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மூன்று நபர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வித அறிவிப்பும் இல்லாததை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
வருகிற ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் மறியலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக வருகிற17.8.2013 முதல் 29.8.2013 வரை ஆசிரியர் சந்திப்புக்களை நடத்துவது, துண்டு பிரசுரங்கள் வெளியிடுவது, பொதுக்குழு கூட்டி உறுப்பினர்களை தயார் படுத்துவது போன்ற இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவது என முடிவாற்றப்பட்டது.
கோரிக்கைகள்:-
1. தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
2. அசிரியர் - அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கும் புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டமே தொடரச்செய்தல் வேண்டும்.
கோரிக்கைகளை வென்றெடுக்க ஆசிரியர் பேரினமே அணி திரள்வீர்.
மரம் சும்மா இருந்தாலும் கற்று அதைச் சும்மா இருக்கவிடாது. ஆம். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் க்ட்டணி தனது 30-ஆம் ஆண்டின் இயக்கப்பயணத்தில் எச்சரிக்கை விடுக்கிறது.
ஒய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல: தியானம்.
பின் வாங்கல் அல்ல பதுங்கல்
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்’
(நன்றி: கவிதை : பசுவய்யா) .
ஒய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல: தியானம்.
பின் வாங்கல் அல்ல பதுங்கல்
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்’
(நன்றி: கவிதை : பசுவய்யா) .
‘நெஞ்சில் மூண்ட நெருப்புக்குச் சமரசமேதும் கிடையாது’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக