பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/16/2013

இரட்டைப்பட்டம் வழக்கு- இணையதளத்தில் வெளியான செய்திக்கு மறுப்பு

கடந்த சில நாட்களாக முக நூல் மற்றும் இணையதளங்களில் இரட்டைப்பட்ட வழக்கு வேண்டுமென்றே இரட்டைப்பட்டம் படித்தவர்களால் இழுத்தடிக்கப்படுகிறது எனவும் இதனால் ஆசிரியர்களின் பதவி உயர்வு தள்ளி போகிறது எனவும் செய்திகள் வெளிவந்துள்ளதாகவும் அதனை தாங்கள் முழுமையாக மறுக்கிறோம். எனவும் இதை நமது வலைதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் இரட்டைப்படம் சார்பாக வழக்கை நடத்தி வரும் திரு. கலியமூர்த்தி மற்றும் திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்படுகிறது.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறயதாவது:-
இரட்டைப்பட்டம் வழக்கு காலதாமாதம் ஆவதற்கு எங்கள் தரப்பு மட்டுமே முழுக்காரணம் என்று தோழர் நாகபட்டினம் கலையரசன் செய்தி வெளியிட்டியிருப்பது வியப்புக்குறியதாக உள்ளது. வழக்கில் தடையாணை பெற்றது நாங்கள். இத்தடையாணையை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ள மூன்று ஆண்டுகள் முடித்த அவர்களால்தான் வழக்கு தாமதம் என்பது அனைவரும் அறிந்ததே. வழக்கு தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பதவி உயர்வு  ஆணை வாங்க கலந்தாய்வு அறைக்குச் சென்ற பின்னால் அவர்களால் இடைக்கால தடை வாங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள் நாங்கள். எனவே நீதி கேட்டு வழக்கு தொடுத்துள்ள நிலையில் இயல்பாகவே தாமதமாவதற்கு எங்களை குறை சொல்லி எங்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் ஏதோ சிண்டு முடியிற வேலையை தோழர் செய்ய முற்பட்டுள்ளார்.  கடந்த முறை இரு தரப்பும் முடிவெடுத்துதான் 22.8.2013க்கு தேதி கேட்டு ஒத்தி வைக்கப்பட்டது. அப்படியிருக்கும் பட்சத்தில் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டிருப்பது முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். கால தாமதம் ஆவதால் எங்களுக்குதான் பேரிழப்பு. இவ்வாறு செய்தி வெளியிடுவதால் யாரை திருப்தி படுத்த முயல்கிறரர் என்று தெரியவில்லை. எனவே உண்மைக்கு புறம்பான செய்திகளை இணைய ஊடகங்களுக்கு தருவதை தோழர் நிறுத்த வேண்டும். வழக்கு தாமதப்படுவதற்கு நீதி மன்றத்தில்  உள்ள நிர்வாகத்திற்கு உட்பட்டது.  இதில் மற்றவர்கள் தலையிட இயலாது. நண்பர் மற்றவர்களை குறை சொல்வது போல் நீதி மன்ற நிர்வாகத்தை விமர்சிக்க முற்பட்டுள்ளார். பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு  பல்லாயிரம் ஆசிரியர்களுக்காக நீதி கேட்டு போராடி வரும் எங்களை தன்னுடைய சுய விளம்பரத்திற்காக வேண்டுமென்றே குறை கூற முற்பட்டிருப்பதை நாங்கள் கண்டிப்பதோடு நண்பர் தன்னுடைய கருத்தை மீட்டுக்கொள்ளும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது யார் மனதையும் காயப்படுத்தல்ல. எங்கள் தரப்பு நியாயத்தை விளக்கவே. நன்றி.
www.mptnptf.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக