பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/16/2013

‘ஒருசர்ப்ப யாகம்’ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணியின் ஆகஸ்ட்30- மாவட்டத் தலைநகர்மறியல் இடைநிலை ஆசிரியர் ஊதியவிகிதமும் தொடரும் அநீதிகளும ---------------------- செ.நடேசன்-முன்னாள் பொதுச்செயலாளர்---


‘எழுத்தறிவித்தவன் இறைவன்’, ‘மாதா,பிதா.குரு,தெய்வம்’ என ஆசிரியர்களுக்கு சமுதாயத்தில் ஒரு கௌரவமான இடம் அளிக்கப்பட்டே வந்திருக்கிறது.ஆனால் இந்த மதிப்பும்,மரியாதையும் இடைநிலை ஆசிரியர்களின் யதார்த்த வாழ்வில் பொருளியல் மதிப்புக்களாக மாறியது உண்டா?

பள்ளியிறுதி,+2 என்ற பொதுக்கல்வியும்,அதன்பின் 2ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி என்ற தொழிற்கல்வித் தகுதியும் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 1960க்குமுன் வெறும் பொதுக்கல்வி மட்டுமே பெற்ற மற்றவர்களைவிடக் குறைந்த ஊதியமே அளிக்கப்பட்ட அநீதி நிலவிவந்தது.1.6.1960ல் நடைமுறைக்கு வந்த முதல் ஊதியக் குழுவில் ‘ஆசிரியர் பயிற்சி என்ற தொழிற்கல்வித்தகுதி’க்கு உயர்ஊதியவிகிதம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ‘நாட் அன்ரீசனபிள்’ என ஏற்றுக்கொண்ட அக்குழு அரசின் நிதிநிலையைக் காரணம் காட்டி ‘அடுத்த ஊதியக்குழு இதைப்பரிசீலிக்கும்’ என்றது.
இரண்டாம்ஊதியக்குழு இடைநிலை ஆசிரியர்களின் தொழிற்கல்வித் தகுதியை ஏற்று 210-325 என்ற ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும்,பொதுக்கல்வி மட்டும் பெற்ற மற்றவர்களுக்கு 200-325 என்ற ஊதியத்தையும் அறிவித்தது. இடைநிலை ஆசிரியர்கள் ஓரளவு திருப்தி அடைந்தார்கள். ஆனால்,ஊதியக்குழுவின் குறைகளை நீக்க அமைக்கப்பட்ட ஒருநபர்குழு இடைநிலை ஆசிரியர்களின் தொழிற்கல்வித் தகுதியை அநியாயமாக நிராகரித்தது.வெறும்பொதுக்கல்விமட்டும் பெற்றவர்களுக்கும் 210-325 என ஊதியத்தை உயர்த்தியது.12ஆண்டுகள் ஆசிரியர்கள் போராடிப்பெற்ற உரிமையைப் பறித்து ஒருநபர்குழு அநீதியை நிலைநாட்டியது
மூன்றாம் ஊதியக்குழுவிலும் இந்த அநீதி தொடர்கதை ஆனபோது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக.1.6.1981முதல் ஆசிரியர் பயிற்சிக்கு 1ஊதிய்உயர்வு அனைத்துநிலை ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டது.
நான்காம் ஊதியக்குழுவில்1.10.1984 முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கு 610-1075 என்ற குறைந்த ஊதியவிகிதமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்,மத்திய அரசில் 1.1.1986 முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1200-2040 என்ற ஊதியவிகிதமும்,வெறும் பொதுக்கல்வித் தகுதிக்கு 950-1500 என்ற ஊதியவிகிதமும் நடைமுறைக்கு வந்தது. இதை ஆசிரியர்கள் மத்தியில் எடுத்துச்சென்றஆரம்பப்பள்ளிஆசிரியர்கூட்டணி ‘இனித் தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியமே’ என்ற கோரிக்கையை எழுப்பியது.1988ல் மாபெரும் ஜேக்டீஅரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்புப் போராட்டத்தின்பின் 1.6.1988 முதல் மத்திய அரசின் ஊதியவிகிதங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தன.
ஆனால்,இடைநிலை ஆசிரியர்களுக்கு அநீதி இழைப்பதையே வாடிக்கையாகக் கொண்ட தமிழ்நாட்டின் அதிகாரவர்க்கம் இடைநிலை சாதாரணநிலைக்கு 1200-2040ஐ நிர்ணயம் செய்துவிட்டு தேர்வுநிலைக்கு 1400-2600க்குப் பதிலாக் 1320-2040ஐயும், சிறப்புநிலைக்கு 1640-2900க்குப் பதிலாக 1380-2040ஐயும் குறைத்து நிர்ணயித்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கு என்றும் தனது வஞ்சகத்தை விஷமாகக் கக்கும் அதிகாரவர்க்கத்தின் இந்தச் சதி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் எழுச்சியால் மீண்டும் முறியடிக்கப்பட்டது.
மத்திய அரசு நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நான்காம் ஊதியக் குழுவை அமைத்தபோது தமிழ்நாடுஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியும், டிட்டோஜேக் அமைப்பும் அக்குழுவை நேரில் சந்தித்தது. 1964ல் மத்தியஅரசால் ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட சட்டோபாத்யாயா குழுவின் பரிந்துரைகள் 1964முதல் 12 ஆண்டுகள் நடைமுறைப் படுத்தப்படாமல்உள்ளதைச்சுட்டிக்காட்டிஅதுபரிந்துரைத்த ஊதியவிகிதம் 1.1.1986 முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கருதி1.1.1996 முதல் அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்குப் புதியஊதியவிகிதங்களை நிர்ணயிக்கக் கேட்டுக்கொண்டது .அதை ஓரளவுஏற்று இடைநிலைஆசிரியர் சாதாரணநிலைக்கு 4500-7000 என்ற ஊதியவிகிதமும், பொதுக்கல்வி மட்டும் பெற்றவர்களுக்கு 3200-4900 என்ற ஊதியவிகிதமும் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டில் இதை நடைமுறைப்படுத்தும்போது அதிகாரவர்க்கம் தனது நஞ்சைக் கக்கும்வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4000-6000 எனக் குறைத்து நடைமுறைப்படுத்தியது. ஆனால்,டிட்டோஜேக்கின் போராட்டம் இதைமுறியடித்து 4500-7000 என்ற ஊதியவிகிதம் நடைமுறையாக வைத்தது.
5.10.2006ல் நியமிக்கப்பட்ட மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு சட்டோபாத்யாயா பரிந்துரைகளை முழுமையாக ஏற்று ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களை நிர்ணயிக்கவலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதாரங்களை முன்வைத்தது.. இதன்படி 1.1.1996ல் இடைநிலை சாதாரணநிலைக்கு 6500-10500 வழங்கியதாகக் கணக்கிட்டு அதன்அடிப்படையில் 1.1.2006முதல் பி.பி.2ல் வ.எண்.12ல் உள்ள 9300-34800 ஊதியமும் 4200 கிரேடு பே வும் ஆக அடிப்படை ஊதியம் ரூ.13500/ஐ நடைமுறைப்படுத்தியது.
ஆனால்,தமிழ்நாட்டில் அதிகாரவர்க்கம் தனது நச்சுப்பற்களால் மிகவலிமையாகக் கடித்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு இடைநிலை ஆசிரியர் சாதாரண நிலை ஊதியவிகிதத்தை பி.பி 1ல் வைத்து 5200-20200 ஊதியவிகிதமும்,2800 கிரேடு பே வும் சேர்த்து மொத்தம் ரூ.8000/ஆக நிர்ணயித்தது. இதன்மூலம் இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5300/ஐ இழப்பாக்கியது. அதுமட்டுமா? இந்த அடிப்படை ஊதியத்துக்கு ஏற்ப அகவிலைப்படியிலும் இழப்பு இன்றுவரை தொடர்ந்துவருகிறது. இவ்வாறு கடந்த ஏழரை ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் இடைநிலை ஆசிரியர்கள்.
ஏற்கனவே பல ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருந்து, பின்னர் 2004ல் கொத்தடிமைகளாகத் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட்டு 1.6.2006ல் காலமுறை ஊதியத்துக்குக்கொண்டுவரப்பட்ட அப்பாவிகளான இந்தஆசிரியர்களின் நியாயங்களை மூவர்குழு மனிதாபிமானமற்றமுறையில், காட்டுமிராண்டித்தனமாக நிராகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் ஆடப்படும் ஒருவிளையாட்டு ‘பரமபதசோபான படம்’ ஏணிகளும், பாம்புகளும் உள்ள இந்த விளையாட்டில் தாயங்கள் உருட்டித் தாயங்கள் உருட்டிக் கட்டம்கட்டமாகவும், சிலநேரங்களில் ஏணிகளில் ஏறியும் முன்னேறும் போதெல்லாம் பாம்புகள் தங்கள் நச்சுப்பற்களால் கடித்துப் பின்னுக்குத்தள்ளிவிடும். இதையெல்லாம் தாண்டி உச்சிக்குச் சென்றால் அங்குள்ள கொடியநாகம் ஒரேகொத்தாகக்கொத்திப் கீழே புறப்பட்ட இடத்துக்கே கொண்டுவந்துவிடும்.
அதுபோல், ஆசிரியர்கள் போராடிப்போராடி முன்னேறும் போதெல்லாம் அங்கங்கு கொத்திப் பின்னுக்கு இழுத்தன அதிகாரவர்க்க அலுவலர்குழு, ஒருநபர்குழுக்கள். இப்போதோ மூவர்குழு என்ற கொடிய நச்சரவம் இடைநிலை ஆசிரியர்களை புறப்பட்ட இடத்துக்கே கொண்டுசென்றிருக்கிறது. இந்த அநீதிக்கு முடிவு?
கவிஞர் சிற்பியின் வரிகளில் சொல்வதானால் இனிஆசிரியர்கள் செய்யவேண்டியது இந்த நச்சரவங்களை ஒழிக்கும் ‘சர்ப்ப யாகங்களே
அதன் தொடக்கம்தான் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகஸ்ட் 30ல் மாவட்டத் தலைநகரங்களில் நடத்தும் சிறைநிரப்பும் மறியல் போராட்டங்கள்.’

இதுவரைநாம்பெற்றவெற்றிகளெல்லாம்
யாருடைய கருணையினாலும்
தயவினாலும் அல்ல.
நம்முடைய ஒற்றுமையால்...
போராட்டங்களால்...
தியாகங்களால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக