ஒன்று
முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1.56
கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு
வருவதாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக
அச்சடிக்கப்பட்டுள்ள இலவசப் புத்தகங்கள் மாவட்டக் கல்வி
அலுவலகங்களிலிருந்து பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளுக்காக 81 லட்சத்து 75 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு
பாடநூல் கழகத்தின் 22 வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி, வட்டார அலுவலகங்களிடமிருந்து மெட்ரிக் ஆய்வாளர், உதவித் தொடக்கக்
கல்வி அலுவலர் ஆகியோர் மூலம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள சிறப்பு விற்பனை நிலையம் மூலமாகவும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக