இன்று(10.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு பட்டியலில் 42வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. 41வது வழக்காக பட்டியலிடப்பட்ட அணு உலை வழக்கு நீதி மன்றத்தின் பாதி நேரத்தை விழுங்கிவிட்டது. எனவே இரட்டைப்பட்டம் வழக்கு தன் எல்லையைத் தொடாமலேயே பெட்டிக்குள் சுருங்கிவிட்டது. இந்த நிகழ்வு வழக்கை எடுத்து நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்ததாக நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை அமர்வில் உள்ள நீதியரசர் சத்தியநாரயணா வருவது சந்தேகம் என்பதால் இனி வழக்கு செவ்வாய் கிழமைதான் வருவதற்கான சாதிதியக்கூறுகள் உள்ளதாக தெரிகிறது. அப்படியே வந்தாலும் அன்று வழக்கில் வாதாடக்கூடிய மூத்த வழக்குரைஞர்கள் வேறு எங்கும் செல்லாமல் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஒட்டு மொத்தத்தில் விடை காண முடியாத விளங்க முடியாத வழக்கு இது. நாமும் மற்றவர்களைப்போல் ஆவலாக உள்ளோம். தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.
தோழமையுடன்.....
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டத்தலைவர்
தோழமையுடன்.....
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டத்தலைவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக