சிங்கம்புணரி: எஸ்.புதூர் ஒன்றியம் தர்மபட்டி நடுநிலைப்பள்ளியில் 95
மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் ஊராட்சி தலைவர் காந்திமதி
தலைமையில் ஊரக விளையாட்டு தர்மபட்டியில் போட்டி நடந்தது. போட்டியில் பள்ளி
குழந்தைகள்,30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம் என
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாட்டில் பங்கேற்கவில்லை. இதை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை நேற்று பள்ளிக்கு அனுப்பவில்லை. 25 குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.உதவிக்கல்வி அலுவலர் பானு தெரிவித்ததாவது:இங்கு பிரச்னை இருப்பதாக தகவல் கிடைத்தது. தலைமை ஆசிரியர் 5 நாள் லீவில் சென்றுள்ளார்.விசாரணை செய்து மேலதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப உள்ளேன், என்றார்.ஊராட்சி தலைவர் காந்திமதி தெரிவித்ததாவது: குடியரசு தின விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்,கல்விக்குழு தலைவரை அழைக்காமல் அவரே நடத்தினார். மாணவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் கிடைப்பதில்லை. ஊரக விளையாட்டுப்போட்டியில் மாணவர்களை பங்கேற்க விடாமல் பள்ளியை பூட்டி வைத்தார்.இதை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை, என்றார். தலைமை ஆசிரியர் செல்வமணியை மொபைலில் தொடர்பு கொண்ட போது "ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக