சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் தர்மபட்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.செலவமணி மீது பொய் புகார் கூறி அப்பள்ளியை விட்டு விரட்ட சிலர் முயற்சி செய்கின்றனர். அப்பள்ளியில் கடந்தாண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக வகுப்பறை கட்டப்பட்டது. அது வெடிப்பு ஏற்பட்டதால் அதை சரி செய்து தருமாறு அக்கட்டிடத்தை கட்டிய கிராமக் கல்விக்குழுத் தலைவரிடம் தலைமையாசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்க மறுத்த கிராமக் கல்விக்குழுத் தலைவர் அக்கட்டிடம் கட்டியதற்கான எவ்வித இரசீதும் கொடுக்காமல் காலம் கடத்தியுள்ளார். இந்த பிரச்சனை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கணேச மூர்த்தி அவர்களிடம் சென்றது. கடந்த வாரம் சி.இ.ஓ. அவர்கள் பள்ளிக்கே நேரடி விசாரணை மேற்கொண்டு தலைமையாசிரியர் மீது எவ்வித தவறும் இல்லை என்று சான்று அளித்துள்ளார். அதன் பின் தலைமையாசிரியர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில் அப்பகுதியில் நடந்த ஊரக விளையாட்டு போட்டிக்கு மாணவர்களை அனுப்பவில்லை என்று கூறி சிலர் மாணவர்களை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்துள்ளனர். விளையாட்டு போட்டி நடப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரோ, உதவித் தொடக்கக்கல்வி அலுவலரோ தலைமையாசிரியர்க்கு தெரிவிக்காத நிலையில் மாணவர்களை எப்படி அனுப்புவது. விதிகளுக்கு சற்றும் புறம்பாக நடக்காத தலைமையாசிரியரை தண்டிக்க முயலும் அதிகார வர்க்கம் மாணவர்களை தடுத்து அதை செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்து பெரிதாக்குகின்றன. கட்டிடம் கட்டிய பணத்தில் ஊழல் நடந்துள்ளதை வெளிக்கொணர்ந்த தலைமையாசிரியரை தண்டிக்க துடிக்கும் வேடதாரிகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடுமையாக எச்சரிக்கிறது. நியாயம் தோற்றதாக வரலாறு இல்லை. இதே தலைமையாசிரயர்தான் எஸ்.புதூர் வட்டாரத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணி செய்ய கையூட்டு பெற்றதை லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் செய்து அந்த அலுவலர் கைது செய்ய காரணமாக இருந்தவர் என்பது குறிபிபடதக்கது. நேர்மை தவறா தலைமையாசிரியரை பாராட்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக