மதுரை: "பள்ளிப்
பருவத்தில் மாணவர்கள் அடிக்கடி தலைவலிப்பதாக கூறினால் உடனடியாக கண்களை
பரிசோதிக்க வேண்டும்" என, மதுரை அரசு மருத்துவமனை கண் பிரிவு தலைவர்
தியாகராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: "பள்ளி
மாணவர்கள் படிக்கும் போதும், கரும்பலகை எழுத்துக்களை பார்க்கும் போதும்,
கண்களை சுருக்கியோ, விரித்தோ பார்ப்பர். அடிக்கடி தலைவலிப்பதாக கூறுவர்.
கண்களில் பிரச்னை இருந்தாலும் தலைவலி வரும். மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு
சங்கம் மூலம் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களின் பார்வையை
பரிசோதிக்கிறோம். பார்வை குறைபாடுடைய மாணவர்களை கண்டறிவதற்கு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்.
பார்வை தடுமாற்றம் இருக்கும்
மாணவர்களுக்கு டெக்னீசியன்கள் மூலம் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு கண்ணாடி
வழங்கப்படுகிறது. பிரச்னை அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்படுகிறது. வயதானவர்களுக்கு கண்புரை நோய், கண் நீர் அழுத்தம்,
சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது.
ஏப்., 2013 முதல் தற்போது வரை
இறந்தவர்களிடம் இருந்து 85 ஜோடி கண்களை தானமாக பெற்று பொருத்தியுள்ளோம்.
கருவிழி தானத்திற்காக நூறு பேர் காத்திருக்கின்றனர்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக