ஊதிய உயர்வு கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள்
பிப்ரவரி 10, 11 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக
அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் வங்கி யூனியன்கள் மற்றும் இந்திய வங்கிகளின் சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படவில்லை.
இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி வங்கி ஊழியர்கள், ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகளும், அவற்றுக்கு சுமார் 50,000 கிளைகளும் இயங்கி வருகின்றன. அவற்றில் 8 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக