ஏழை மாணவர்களும், தனியார் பள்ளியில் பயிலும் வகையில், கடந்த 2012-13ம் கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகள், 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டது. இவற்றில், ஒரு கி.மீ., சுற்றளவுக்குள், வேறு எந்த அரசு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, இல்லாத பட்சத்தில், அருகில் இருக்கும் தனியார் மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில், மாணவர்கள் பயின்றால், அதற்குரிய தொகையை அரசு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வழங்கி வருகிறது. இதன்படி, கடந்த 2013-14ம் கல்வி ஆண்டில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கிய பள்ளிகள், விபரத்தை, அனுப்புமாறு தொடக்க கல்வி இயக்குனரகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம் கேட்டுள்ளது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள உத்தரவில்: 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படி, மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்திய பள்ளிகளுக்கு, அதற்குரிய தொகையை வழங்குவதற்காக, பள்ளி, சேர்க்கை விபரத்தை உடனே அனுப்ப வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், அதன் முழு பொறுப்பு மாவட்ட தொடக்க கல்வி அலுவலரையே சாரும்,இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக