திருப்புத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வரை சம்பளம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இங்கு பணி செய்யும் 60 ஆசிரிய,ஆசிரியைகள் மிகவும் நொந்து போய் உள்ளனர். பள்ளித் தரப்பில் கூறுகையில், "பிப்ரவரி என்பதால் வருமானவரி சம்பந்தமான படிவம் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இம்முறை, ஐ.டி.பாரம் சரியாக பூர்த்தி செய்யாததால், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.சரி செய்யப்பட்டு, மீண்டும் சம்பளபில்லுடன் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் சம்பளம் வழங்கப்படும், ' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக