தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்திருப்பதாவது: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெற்று தருவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை விடுமுறை தினங்களிலேயே பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.
இலவச பஸ் பாசை போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து பெற்று, பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2 ல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக