கடந்த கல்வி ஆண்டை காட்டிலும், நடப்பு கல்வி ஆண்டில், மொத்த வேலைநாட்களை அடிப்படையாக கொண்டு, மொத்த கற்றல், கற்பித்தல்நாள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு,183 இருந்து, 186 நாட்களாக நிர்ணயம் செய்து, பள்ளி நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2014-15ம் கல்வி ஆண்டுக்கான துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான, பள்ளிநாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மொத்த வேலை நாள் 220, அதில், மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 205, தேர்வு நாள் 15, உள்ளூர் விடுமுறை, மூன்று நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மொத்த வேலை நாள், 210, அதில், மொத்த கற்றல்,கற்பித்தல் நாள் 186, தேர்வு நாள் 24, உள்ளூர் விடுமுறை, மூன்றுநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 183, என இருந்தது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 186 நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவை, மொத்த வேலை நாள் மற்றும் விடுமுறை நாட்களை அடிப்படையாக வைத்து, கற்றல் கற்பித்தல் நாளாக, மூன்று நாள் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில், சனிக்கிழமையில், தெலுங்கு வருட பிறப்பு, உழவர் திருநாள், மிலாடி நபி, ஞாயிற்றுக் கிழமையில், பக்ரீத், கிருஷ்ண ஜெயந்தி ஆகிய, ஐந்து விடுமுறை நாள் வருகிறது என்பது குறிபிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக