இரட்டைப்பட்டம் வழக்கு எண் 529 சென்னை உயர்நீதி மன்றத்தில் 5.2.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால் அவ்வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி உள்ளிட்ட நபர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் S.L..P எனப்படும் சிறப்பு விடுவிப்பு மனுவை தாக்கல் செய்தனர். வழக்கை உச்சநீதி மன்ற வழக்குரைஞர் திரு.ஹரீஸ் குமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் உடனடியாக பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் UGC.யும் இதில் எதிர் உரை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியது. இதையொட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கில் இணைந்த 217 பேருக்கும் கிட்டதட்ட 250 பக்கங்கள் அடங்கிய வழக்கு விபரம் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டது. இவர்கள் உச்ச நீதி மன்றத்தில் தொடரும் வழக்கில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பினால் உச்சநீதி மன்ற வழக்குரைஞர் மூலம் வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தானகவே அவர்கள் இந்த வழக்கில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள்.
இது குறித்து வழக்கில் முதல் பெட்டிசனரான திரு.கலியமூர்த்தி நம்மிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற நடைமுறையின்படி வழக்கில் உள்ள அனைவருக்கும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கில் இணைய இந்த 217பேரும் விரும்பினால் எங்களை தொடர்புகொண்டு உச்சநீதிமன்றத்தில் புதிதாக வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தவறினால் அவர்கள் பெயர் உடனடியாக நீதிமன்ற பதிவில் இருந்து நீக்கப்படும். மேலும் வழக்கில் புதிதாக இணைய விரும்பினாலும் எங்களை அவர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம். வழக்கின் சாதகமான இறுதி தீர்ப்பு மிக விரைவில் வெளிவரும் எனவும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 18.7.2014 அன்று வர இருப்பதாகவும் அது சம்பந்தமான வேலைகளில் தங்கள் குழு ஈடுபட்டுள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.
இது குறித்து மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்
1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
4.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
www.mptnptf.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக