சென்னை: பிளஸ் 2 உடனடி தேர்வை எழுதிய தனி தேர்வர்களுக்கு, ஜுலை 12ம் தேதி காலை 11:00 மணிக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அதன் விவரம்: மாணவ, மாணவியர், 12ம் தேதி காலை, 11:00 மணி முதல், தேர்வெழுதிய மையங்களுக்கு நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று, உரிய கட்டணத்தை செலுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக