மத்திய பட்ஜெட்டில் கிடைத்துள்ள வரிச்சலுகையால் மாதச் சம்பளம் பெறும் பிரிவினருக்கு ரூ. 40 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
2014-15 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போன்று வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் உள்ள முதலீட்டுத் திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, நிரந்தர வைப்பு, வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் இதுவரை ரூ. 1 லட்சம் வரை முதலீடு செய்வோருக்கு மட்டுமே வரி விலக்கு இருந்தது.
இப்போது ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்வோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சொந்தமாக குடியேறியுள்ள வர்களின் வீட்டுக் கடனுக்கான வட்டி மீதான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மூன்று முறைகளிலும் வரிச் சலுகையை பெறுவோரால் அதிகபட்சமாக ரூ.39 ஆயிரத்து 655 வரை சேமிக்க முடியும் என்று நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக