பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/02/2011

கருணாநிதி கவிதைக்காக சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தமா?முதல்வர் ஜெயலலிதா பேட்டி


சென்னை : ""கருணாநிதி கவிதை எழுதினார் என்பதற்காக, சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஒட்டுமொத்தமாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்,'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டையில், நேற்று முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:

தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பான பிரச்னையில், அரசு தலையிட வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்துகிறார்களே?

இது தொடர்பாக, எந்தவித மனுவும் இதுவரை பெறப்படவில்லை. பெற்றோர்களோ, பள்ளிகளோ, அரசு தலையிடக்கோரி கேட்டுக்கொண்டால், அவர்களின் பிரச்னைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இந்த பிரச்னை தொடர்பாக, போராட்டம் நடத்துகிறார்களே?

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ஏற்கக் கூடியதாக இல்லை என்று பள்ளிகள் கருதினாலோ அல்லது இந்த விவகாரத்தில் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் நினைத்தாலோ, அரசிடம் முறையிடலாம். போராட்டம் நடத்துவது தேவையற்றது.
பொறியியல் கவுன்சிலிங், சென்னையில் மட்டும் நடைபெறுமா? அல்லது, வேறு நகரங்களிலும் நடத்தப்படுமா?

சம்பந்தப்பட்ட துறையிடம் ஆலோசித்த பின் அறிவிக்கப்படும்.

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி வந்தது குறித்து?

இது தொடர்பாக, ஏற்கனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்துள்ளோம். மூன்றாம் தேதி கவர்னர் உரை நிகழ்த்த இருக்கும் போது, அனைத்து விவரங்களையும் இப்போது வெளியிடுவது சரியாக இருக்காது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக, "நான் எழுதிய கவிதைகளை மட்டும் நீக்கிவிட்டாவது, திட்டத்தை அமல்படுத்தலாமே' என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே?

இந்த பேச்சு, குழந்தைத்தனமானது. அவர் கவிதை எழுதினார் என்பதற்காக, நாங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஒட்டுமொத்தமாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

வருமான வரி கட்டாவிட்டால் கைது நடவடிக்கை

புதுடில்லி : வருமான வரி கட்டாமல் ஏய்ப்பவர்களுக்கு எதிராக, கைது நடவடிக்கையை மேற்கொள்ள வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர் தீவிர போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால், ஆடிப்போய் உள்ள மத்திய அரசு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கறுப்பு பணத்தை வைத்திருப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் போன்ற சதிச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறையின் கீழ் சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய குற்றப் புலனாய்வு பிரிவு துவக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, வருமான வரி கட்டாமல் ஏமாற்றும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய, தனது அதிகார எல்லையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது வருமான வரித்துறை. செலுத்தப்படாமல் இருக்கும் வருமான வரி பாக்கி மட்டும் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.இதில், பெரும் பகுதியை வசூல் செய்வதில், வரி வசூலிப்பாளர்களுக்கு தலையாய பிரச்னையாக உள்ளது. தற்போது, இதை மீட்பதற்காக வருமான வரித் துறையில் வரி மீட்பு அதிகாரி (டி.ஆர்.ஓ.,) உள்ளார். இவர், வரி கட்டாத நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரம் பல ஆண்டுகளாக இருந்தாலும், வருமான வரித்துறையில் பின்பற்றப்பட்ட மென்மையான அணுகுமுறை காரணமாக உறுதியாக பின்பற்றப்படவில்லை. மேலும், வரி நிலுவை பிரச்னை, பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் வந்ததால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டதன் மூலம், வரி மீட்பு அதிகாரிக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வரி கட்டாத நபரை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், சொத்துகளை ஜப்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி கட்டாத நபரின் அசையும், அசையாத சொத்துகளை கைப்பற்றி அவற்றின் வரியை ஈடுகட்டுவதற்காக ரிசீவரை நியமிக்கவும் அதிகாரம் அளிக்கும் வகையில், வருமான வரிச் சட்டம் பிரிவு 222 கீழ் வழி வகை செய்யப்பட்டுள்ளது.வருமான வரித் துறையில் தற்போதுள்ள டி.ஆர்.ஓ., பதவி என்பது அதிகாரம் இருந்தும், அதிகாரத்தை பயன்படுத்த முடியாத பதவியாக இருந்து வந்தது. இப்போது, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலுவையில் உள்ள வருமான வரி விரைந்து மீட்கப்படும் என தெரிகிறது.


6/01/2011

தமிழகம் முழுவதும் 80 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடல்: ஏ.சங்கரன்

"தமிழகத்தில், 54 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. மேலும், 26 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, மாணவர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால், இப்பள்ளிகளை மூடுவதற்கு, பள்ளி நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான விருப்ப கடிதங்களை, ஏற்கனவே ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையிடம் வழங்கியுள்ளனர். அதன்படி, 54 பள்ளிகளில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என, ஆசிரியர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 26 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

இவற்றில், 54 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களோ, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களோ நிரப்பப்பட மாட்டாது என்று, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 54 பள்ளிகளின் பட்டியல் மற்றும் 26 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து என்.சி.டி.இ., அறிவித்துள்ள பள்ளிகளின் பட்டியல் ஆகியவை, துறையின் இணையதளத்தில் (தீதீதீ.ஞீtஞுணூt.tண.ணடிஞி.டிண) வெளியிடப்பட்டுள்ளன.26 ஆசிரியர் பயிற்சிப் பள்ளி களில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும், இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் மட்டும், தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள் என்றும், ஆசிரியர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 80 பள்ளிகளில், வரும் கல்வி யாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடை பெறாது.