பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/21/2012

குரூப்-2 நியமன உத்தரவு வழங்க உயர் நீதிமன்றம் தடை

குரூப்-2 பணிகளுக்கு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது.

கடந்த ஆண்டு, ஜூலையில், குரூப்-2 தேர்வு நடந்தது. 6,692 பணியிடங்களுக்காக, இந்த தேர்வு நடந்தது. இதில், 3.5 லட்சம் பேர் எழுதினர். கடந்த, ஜூன் மாதம், தேர்வு முடிவு வெளியானது. 6,949 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு, ஜூன் இறுதியில் துவங்கி, ஜூலை வரை நடந்தது. 
இந்நிலையில், கரூரைச் சேர்ந்த நிர்மல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "ஐந்து கேள்விகளுக்கு, கீ விடைத்தாளில் வழங்கப்பட்ட, விடைகள் தவறானவை. "ஒரு மதிப்பெண்ணால், எனக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு இல்லை. எனக்கு, ஐந்து மதிப்பெண்கள், கூடுதலாக வழங்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும்&' எனக் கூறப்பட்டுள்ளது. 
மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் கவுன்சிலிங், முடிந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை, அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும். 
ஏற்கனவே கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க கூடாது. டி.என். பி.எஸ்சி., தரப்பில், 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்.

10/20/2012

TRB -TNTET Key answer

வெனிசுலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்...!

 

"தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் சேர், மேடம்" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவேராவின் படம் வகுப்பறைகளை அலங்கரிக்கின்றது. மாணவர்கள் சே போன்று வாழ வேண்டுமென சபதமேற்கின்றனர்.
                            பெரும்பான்மை வாக்கு பலத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆட்சிக்கு வந்த அதிபர் சாவேஸ், அண்மைக்காலமாகவே தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்த காலத்தில் இருந்து, அந் நாட்டில் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் மெதுவாக நடைமுறைக்கு வருகின்றன. ஜனநாயக பொதுத்தேர்தல், ஜனநாயக வழியில் நடந்தால், உலகம் முழுவதும் சாவேஸ் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பெரும்பாலான வறிய(மூன்றாம் உலக நாடுகளில்) பெரும்பான்மை மக்கள் வறியவர்களாக இருப்பதால், அவர்கள் தமது நலன் குறித்து பேசும் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமென்ன? பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக வெனிசுவேலா, ஈகுவடோர், பிரேசில், பராகுவை, ஆர்ஜென்டீனா, பொலிவியா, நிகரகுவா.... இப்படி நீண்டு கொண்டே போகும் பட்டியலில் உள்ள நாடுகளில் எல்லாம், சோஷலிசம் பேசுபவர்களையே பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவைகளில் வெனிசுவேலா, பொலிவியா தவிர பிற நாடுகள் சோஷலிச சீர்திருத்தங்களை(கவனிக்கவும், ஜனநாயக வழியில்) நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.

               வெனிசுலாவில் சாவேஸ் துணிவுடன் நடந்து கொள்வதற்கு, அந்நாட்டின் எண்ணை வளம் முக்கிய காரணம். எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் அங்கத்துவ நாடான வெனிசுவேலாவின் அதிகளவு எண்ணை அமெரிக்காவிற்கே இன்றுவரை ஏற்றுமதியாவது முரண்நகை. வெனிசுவேலா, அமெரிக்காவிற்கு இடையில் கசப்பான உறவே தொடர்கின்றது. 2002 ம் ஆண்டு சாவேசை ஓரிரு நாட்கள் பதவியகற்றிய சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு, மக்கள் ஆதரவுடன் மீண்ட சாவேசை நிரந்தர அமெரிக்க எதிரியாக மாற்றவே வழிவகுத்தது. அதன் பின்னர், ஐ.நா.சபையில் உரையாற்றிய சாவேஸ், அமெரிக்கா அதிபர் புஷ் ஒரு பிசாசாக சித்தரித்து கலகலப்பூட்டினார். அமெரிக்க அரசுக்கு எரிச்சலூட்டும் விதமாக, கியூபா, ஈரான், ஆகிய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். ஒரு காலத்தில் "சர்வதேச பயங்கராவாதி" என்று பெயரெடுத்த, தற்போது பிரெஞ்சு சிறையில் தண்டனை அனுபவிக்கும், வெனிசுவேலாவை சேர்ந்த கம்யூனிச புரட்சிக்காரன் கார்லோஸ் தேசிய நாயகன் என்று கௌரவித்தார்.
                இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள சாவேஸ், தனது நாட்டில் சோஷலிச சீர்திருத்தங்களை மிக மிக மெதுவாகவே நடைமுறைக்கு கொண்டு வருவதாக விமர்சனங்கள் உள்ள அதே நேரம், அந் நாட்டின் பணக்கார மத்தியதர வர்க்கம் சாவேசை பதவியை விட்டகற்ற, பேயோடு கூட்டுச்சேரவும் தயாராக உள்ளது. இருப்பினும் அவர்கள் நலன் காக்கும் கட்சிகள், ஊடகங்கள், தனியார் கல்விநிறுவனங்கள் என்பன தொடர்ந்தியங்க சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிலையங்கள், பெற்றோலிய நிறுவனங்கள் என்பன அரசியல்-பொருளாதாரத்தை தீய நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்த போது மட்டும் தான், அவை தேசியமயமாக்கப் பட்டன.
              தற்போது பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு காரணம் இந்த வருடம் வந்துள்ள புதிய கல்வித்திட்டம். ஆர்ஜென்டீன புரட்சியாளர் சே குவேரா கூறியதை போல, "ஒரு புதிய மனிதனை உருவாக்கும்" சோஷலிச அடிப்படையில் அமைந்த கல்வி, தற்போது அனைத்து அரச பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி பிள்ளைகள், "வெனிசுவேலா சரித்திரம் பற்றி, பூர்வீக செவ்விந்தியர் பற்றி, எண்ணை வளம் இருந்தும் அபிவிருத்தியடையாத காரணம் பற்றி, சர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றி...", இன்ன பிறவெல்லாம் கவனம் செலுத்தி கற்க வேண்டும்.  நிச்சயமாக, மத்தியதர வர்க்கம் இதுகுறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை. "அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களை எங்கள் பிள்ளைகள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்." என்று கூப்பாடு போடுகின்றனர். மொத்த சனத்தொகையில், மிகச் சிறுபான்மையான பணக்கார மத்தியதர வர்க்கம், மக்கள் ஆதரவின்றி நலிந்து போய்க்கொண்டிருக்கின்றது. "உலகில் அனைத்து நாடுகளிலும் போதிக்கப்படும் கல்வியில் அரசியல் கலந்துள்ளது. சுயநலம், தனியார்மயம், முதலாளித்துவம் சார்பான சிந்தனைகள் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி கண்டுகொள்ளாதவர்கள், சோஷலிசம் கற்பது பிழை என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?" இவ்வாறு கேட்கின்றனர் பல அரச பாடசாலை அதிபர்கள்.
               புதிய கல்வித்திட்டம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் சேர், மேடம்" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். அதிபரிடம் சென்று முறையிடுவதானால், கதவை தட்டாமலே நேரே போகலாம். இதையெல்லாம் பல பெற்றார்கள் வரவேற்கும் அதே வேளை, ஒரு சில மத்தியதர வர்க்க பெற்றோர் மட்டும், "எங்கள் பிள்ளைகளை கெடுக்காதே!" என்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கூச்சல் போடுகின்றனர்.
                 ஜனாதிபதி சாவேஸ், சோஷலிச புரட்சி பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும், என்று கூறி வருகின்றார். "ஒரு சமூகத்தின் நெறிகளை தீர்மானிக்கும் நிறுவனங்களை பொறுப்பெடுத்து, அவற்றில் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு மாற்றீடாக சோஷலிச ஆதிக்கத்தை கொண்டுவருவதன் மூலமே, சமூகத்தை மாற்ற முடியும்." என்று மார்க்சிய அறிஞர் அன்டோனியோ கிராம்சியின் கூற்றை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.
நன்றி : கலையகம் - வலைப்பூ 

அக்.26-ம் தேதி அரபா நாள்; 27-ம் தேதி பக்ரீத்: அரசு ஹாஜி அறிவிப்பு

ஷரீஅத் முறைப்படி சனிக்கிழமை (அக். 27) புனித ஹஜ்பெருநாள் (பக்ரீத்) நிச்சயிக்கப்பட்டிருப்பதாக அரசு ஹாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கடையநல்லூர் ஏ.ஒய்.முஹ்யித்தீன் அப்துல்காதிர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அக். 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை துல்ஹஜ் பிறை தென்படாததால், அக். 18-ம் தேதி வியாழக்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறை என்றும், அக்.26-ம் தேதி வெள்ளிக்கிழமை புனிதமிகு அரபாவுடைய நாள் என்றும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத் ஆகும்.

அக். 27-ம் தேதி சனிக்கிழமை புனிதமிகு ஹஜ் பெருநாள் (பக்ரீத்) ஷரீஅத் முறைப்டி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

நன்றி:


2012 - 13ஆம் நிதி ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.6% ஆக உயர்கிறது. வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

கடந்த 2011-12  நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.25 சதவீதத்தை விட அதிகமாக தற்பொழுது 2012-13 நிதி ஆண்டிற்கான காலத்தில் பி.எப் சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டிற்கு 8.6% முதல் 8.8% வரை பெறப்பட கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலத்தில் 2011-12 நிதி ஆண்டில் சதவீதம் 8.25
சதவீதமாகவும், அதற்கு முன், 2010-11 ஆண்டில் 9.5 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இதே வட்டிவிகிதம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சந்தாதாரர்களுக்கும் பொருந்தும் எனவும் இந்த வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

10/18/2012

பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள்

ஆசிரியர் பயிற்சி படிவங்கள்

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் புகார் பெட்டி : கல்வி துறைக்கு, தேசிய ஆணையம் உத்தரவு

  NEW
அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா உத்தரவிட்டார்.
இந்த ஆணையத்தின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழ்ந்த குழந்தை உரிமை மீறல்கள் குறித்த, இரண்டு நாள் பொது விசாரணை, சென்னையில் நேற்று துவங்கியது. இதற்காக, குழந்தை உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், விசாரணை செய்த போலீசார், கல்வித்துறை அதி காரிகள் உள்ளிட்ட பலதுறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொது விசாரணையில் ஆஜராக வேண்டும் என, தேசிய கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், விசா ரணைக்கு வந்தனர். கல்வித்துறை முதன்மை செய லர் சபிதா, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
62 உரிமை மீறல்கள் : இரு மாநிலங்களிலும் நிகழ்ந்த, 62 உரிமை மீறல்கள் குறித்த சம்பவங்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், கல்வி உரிமை மறுத்தல், குழந்தை தொழிலாளர், உடல் ரீதியான தண்டனை அளித்தது, குழந்தை கடத்தல், பாலியல் கொடுமைகள் என, பல்வேறு உரிமை மீறல் சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செத்தவரை கிராமத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் மாதம், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து, விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, பேச முடியாமல் அழுததைக் கண்டு, பார்வையாளர்கள் கடும் வேதனை அடைந்தனர்.
மிரட்டல் புகார் : "போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை; உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை' என, சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார்; மேலும், தங்களுக்கு, தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு டி.எஸ்.பி., அளித்த பதில் திருப்தி அளிக்காததால், ""பாதிக்கப்பட்ட சிறுமிக்கென தனியாக வக்கீலை நியமித்து, அவருக்கு உரிய நீதி கிடைக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சாந்தா சின்கா உத்தரவிட்டார். மேலும், ""சிறுமி விரும்பும் பள்ளியில், கல்வியைத் தொடர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அவர் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசுகையில்,
""சிறுமி, எந்தப் பள்ளியில் சேர விரும்பினாலும், அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என்றார். புகார்பெட்டி : இரண்டாவதாக, சென்னை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, அருகில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவிபெறும் பள்ளி) படித்து, பள்ளி ஆசிரியையின் கொடுமைக்கு ஆளாகி, ஜூனில், "கெரசின்' ஊற்றி தீ வைத்து, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளை, சாந்தா சின்காவும், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும், கடுமையாக கண்டித்தனர். மாணவியரை ஆசிரியை கொடுமைப்படுத்தியது குறித்து, தங்களுக்கு எதுவும் தெரியாது என, பள்ளி தாளாளர் தெரிவித்தார். இதற்கு, ""பள்ளியில் நடப்பது எதுவுமே தெரியாமல், எப்படி ஒரு நிர்வாகம் இருக்க முடியும்? மாணவியரிடம், குறைகளை கேட்டறியும் வழக்கத்தை கடைபிடித்தீர்களா?'' என, பல்வேறு கேள்விகளை, வசந்திதேவி கேட்டார். இதையடுத்து, ஆணைய தலைவர் சாந்தா சின்கா கூறியதாவது:
சம்பந்தபட்ட பள்ளி மட்டுமில்லாமல், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைப்பதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம், முறையாக குறைகளை கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய, பள்ளி நிர்வாகங்களும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சாந்ததின்கா தெரிவித்தார்

அக்., 19, 20 ல் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு ஆன் லைன் கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு ஆன் லைன் கவுன்சிலிங், அக்., 19, 20ம் தேதிகளில் நடக்கவுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் 430 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.
 

இதற்கான ஆன் லைன் கவுன்சிலிங், அக்., 19, 20 ம் தேதிகளில் நடக்கவுள்ளது. பதவி மூப்பு அடிப்படையில், எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அக்., 19 காலை 9 முதல் 12.30 மணி வரை, 967 முதல் 1116 எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை, 1117 முதல் 1216 வரை எண் உள்ளவர்களுக்கும் நடக்கிறது. அக்., 20 காலை 9 முதல் மதியம் 12.30 மணி வரை, 1217 முதல் 1366 வரை எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை, 1367 முதல் 1466 வரை எண் உள்ளவர்களுக்கும் நடக்கவுள்ளது.

TRB ஆல் மட்டுமே இறுதியான விடைகள் வெளியிடப்படும் TET க்கு...

ஆசிரியர் தகுதித் தேர்வினில் வினவப்பட்ட வினாக்களுக்கான விடைகளாக NR IAS அகாதமி மற்றும் விடியல் பயிற்சி மையம் இவற்றின் விடைகள் இறுதியானவை அல்ல...



எனவே இறுதியான மற்றும் தெளிவான விடைகள் TRB இணையதளத்தில் வெளியிடும் வரை இதுவரை வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்புகளை அவசர தேவைக்காக பார்க்க மட்டும் உபயோகப்படுத்தும் படி இணைய நண்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

சென்ற TET தேர்வின் போது 5 நாட்களுக்கு கழித்தே விடைகள் TRB ஆல் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

10/17/2012

ஆசிரியர் தகுதித்தேர்வு: 10 நாளில் `கீ ஆன்சர்' வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான `கீ ஆன்சர்' 10 நாளில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறினார்.

தகுதித்தேர்வு

அரசு பள்ளிக்கூடங்களில் 23 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்காக நேற்று முன்தினம் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு காலையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு பிற்பகலும் நடந்தன. 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். கிட்டத்தட்ட 85 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை

தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டதால் அனைத்து கேள்விகளையும் நன்றாக படித்து பதில் அளிக்க முடிந்தது என்றும், முந்தைய தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த தேர்வு எளிதாக இருந்தது என்றும் தேர்வு எழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தேர்ச்சி மதிப்பெண்

எனினும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாகவும் ஒருசாரார் கூறினார்கள். இதேபோல், கலைப்பிரிவு (மொழி, சமூக அறிவியல் பிரிவு) ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் தமிழ் பாடமும், உளவியல் பாடமும் கொஞ்சம் கடினம்தான் என்ற கருத்து நிலவியது.

பொதுவாக போட்டித்தேர்வு எழுதுவோர் தேர்வு முடிந்ததும் தங்களுக்கு எத்தனை மதிப்பெண் கிடைக்கும்? என்று கணக்குப்போட்டுப் பார்ப்பது வழக்கம். அதே நிலையில்தான், தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள், தேர்வில் பாஸ் மார்க் (90 மதிப்பெண்) வாங்கிவிடுவோமா? என்றும், ஓரளவு நன்றாக தேர்வு எழுதியவர்கள் எத்தனை மார்க் வருமோ? என்றும் மண்டையைப் போட்டு குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். கேள்விகளுக்கு அதிகாரபூர்வமான சரியான விடை தெரியாததே அவர்களின் குழப்பத்திற்கு காரணம்.

10 நாளில் `கீ ஆன்சர்'

தகுதித்தேர்வுக்கான `கீ ஆன்சர்' வெளியிட உள்ளதாக பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இருந்தபோதும் ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக வெளியிடும் `கீ ஆன்சர்'-ஐ மட்டுமே விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் தேர்வு எழுதிய அனைவரும் அதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தகுதித்தேர்வுக்கான `கீ ஆன்சர்' 10 நாளில் வெளியிடப்படும் என்றும், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.åக்ஷீதீ.åஸீ.ஸீவீநீ.வீஸீ) அதனை தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார். கடந்த தகுதித்தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த தடவை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 சதவீதம் குறைக்க முடியும்

ஒருவேளை தேர்ச்சி விகிதம் முன்பு போல மிகவும் குறைவாக இருந்தால் தேர்ச்சி சதவீத மதிப்பெண் குறைப்பது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கக்கூடும். மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டத்தின்படிதான் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.



அந்த சட்டத்தில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு (பி.சி., எம்.சி.பி., எஸ்.சி., எஸ்.டி.) தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதம் வரை குறைக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது. அதன்படி, 60 சதவீத மதிப்பெண் என்றிருப்பதை இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 55 சதவீதம் (82.5 மார்க்) வரை குறைக்க முடியும்.

அனுபவம்-பதிவுமூப்புக்கு மதிப்பெண்

இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பணிஅனுபவம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பிளஸ்-2 தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 மதிப்பெண்ணை முழுவதுமாக அல்லது 5 மதிப்பெண்ணை பணிஅனுபவத்திற்கும், சீனியாரிட்டிக்கும் ஒதுக்க வேண்டும் என்றும் அரசு வேலைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன் பிறகே, ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை மூலம் நிரப்பப்பட உள்ளன.
முதலில் 2,246 பேர் தேர்வு செய்யப்படுவதால், "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டாலும் பெரும்பாலும் இவர்களில் தகுதியான அனைவருக்கும் பணி நியமனம் கிடைத்துவிடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களுக்கு ஓரிரு வாரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 12-ல் நடைபெற்றது. 6.6 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பில் 202 பேர் உரிய தகுதிகளுடன் இல்லாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
2,246 பேருக்கு பணி நியனம் வழங்கப்பட இருந்த நிலையில், ஆசிரியர் நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை பணியில் நியமிக்கக் கூடாது என்றும், ஆசிரியர் நியமனத்துக்கு என தனியாக தேர்வு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, 2,246 பேருக்கு பணி நியமனம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான உயர் நிலைக் குழு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்தது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பட்டயத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க தமிழக அரசு ஆணையிட்டது. இந்த "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனமும் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் இப்போது ஒன்றாக பணி நியமனம் நடத்தப்படுமா என்று சிலர் சந்தேகங்களை எழுப்பினர்.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த நேரத்தில் (90 நிமிஷங்கள்) கடினமான கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்து இவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, மறுதேர்வில் கூடுதல் நேரத்தில் (3 மணி நேரம்) தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுடன் இவர்களை ஒப்பிட முடியாது. அதோடு, தகுதித் தேர்வில் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள அவர்களுக்கு முன்கூட்டியே பணி நியமனம் வழங்குவதுதான் இயற்கை நீதி ஆகும்.
புதிய தேர்வு முறையின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியவுடன் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.2000லிருந்து ரூ.5000/- ஆக உயருமா ?

இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியம் 4,200 ஆக உயர்வு , தன் பங்கேற்பு ஓய்வூதியம் (CPS) இரத்து போன்றே பண்டிகை முன்பணம் உயர்வு அறிவிப்பும்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அறிவிப்புகளை ஓப்பிடுகையில் பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க சாத்திய கூறுகள் அதிகம் இருந்தாலும்,
முறையான அறிவிப்பிற்கு இதை அறுதியிட்டு கூற முடியும். விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குள் இது சார்ந்த அறிவிப்புகள்  வரலாம்!

சி.இ.ஓ.,க்கள் 6 பேர் மாற்றம்

முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப் பட்டனர். கோவை மாவட்ட சி.இ.ஓ., ராஜேந்திரன், சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டார். மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம்: பெயர் பழைய இடம் புதிய இடம்
1.சிவா தமிழ்மணி சி.இ.ஓ., - சென்னை துணை இயக்குனர் - நிர்வாகம், தொடக்க கல்வி இயக்ககம்.
2.ராஜேந்திரன் சி.இ.ஓ., - கோவை சி.இ.ஓ.,-சென்னை
3.செங்குட்டுவன் துணை இயக்குனர் - நிர்வாகம், தொ.க.இ., சி.இ.ஓ., வேலூர
் 4.பொன் குமார் சி.இ.ஓ., - வேலூர் எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., - கிருஷ்ணகிரி
5.ராமசாமி எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., - கிருஷ்ணகிரி சி.இ.ஓ., - தேனி 6.ஞானகவுரி சி.இ.ஓ., - தேனி சி.இ.ஓ., -
கோவை பதவி உயர்வு 1.சிவகாம சுந்தரி டி.இ.இ.ஓ., - சென்னை கூடுதல் சி.இ.ஓ., - ராமநாதபுரம் 2.வசந்தா டி.இ.ஓ., - கடலூர் சி.இ.ஓ., - நீலகிரி 3.ஜெயலட்சுமி டி.இ.ஓ., - பெரம்பலூர் எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., - சிவகங்கை

கல்வித்துறையில் தகவல் மேலாண்மை :ஆன்லைன் முறை டிசம்பரில் துவக்கம்

தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்டம் இணைந்து, கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான தகவல் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இதற்காக மாவட்டம்தோறும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, படிவங்கள் வழங்கப்பட்டு, பள்ளிகள் குறித்து தகவல் சேகரித்தனர். இப்பணி நேற்றுடன் முடிவடைந்தது. வட்டார மற்றும் மாவட்ட அளவில் சரிபார்க்கப்பட்டு, வரும் 21ம் தேதி, கம்பயூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு நவ., 30க்குள் கம்ப்யூட்டர் பதிவுகள் அனுப்பப்படும். டிசம்பர் முதல், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள் குறித்து, tn.nic.gov.inஎன்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் www.communication.tn.schools.gov.in என்ற இணையதளம் மூலம், கல்வித்துறை வட்டார அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் தங்களுக்குள், தகவல் பரிமாற்றம் செய்யவும், மாநில அலுவலர்கள் நேரடியாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் தொடர்பு கொள்ளவும் முடியும்.

தொடக்கக் கல்வி துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் விரைவில் நியமனம்

தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். கடந்த, 2008- 09, 2009- 10, 2010- 11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது.
இவர்களில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 149 பட்டதாரி ஆசிரியர், 10ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டனர். தொடக்க கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 83 பட்டதாரி ஆசிரியர், ஒரு வாரத்திற்குள், பணி நியமனம் செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 19 பணிஇடங்கள், நிரப்பப்பட்டு விட்டன. இதர துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

TNETஆசிரியர் மறு தகுதி தேர்வு வினா-விடைகள்

Govt Letter no-48211 Dated 9.1.12

10/14/2012

தினமணி - அன்புள்ள ஆசிரியர்க்கு

கை கழுவும் பிரச்னை அல்ல!


ஆறு மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசும் இது தொடர்பான தகவல் சேகரிக்கும் முயற்சியாக, ஒவ்வொரு பள்ளிக்கும் 32 பக்கங்களில் பல்வேறு கேள்விநிரல்களுடன் படிவங்களை அளித்துள்ளது.
 தமிழ்நாட்டைப் பொருத்தவரை, கழிப்பறைகள் இல்லாத பள்ளிகளே இல்லை என்று உறுதியாகக் கூறிவிட முடியும். ஆனால், இந்தக் கழிவறைகள் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை என்பதும், மாணவர்கள் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டி வைக்கப்படுகிறது என்பதும், இவை பெரும்பாலும் சுகாதாரமாக இருப்பதில்லை என்பதும்தான் தமிழக பள்ளிகளில் நிலவும் கழிப்பறைச் சிக்கல்கள்.
 சில பள்ளிகளில் இத்தகைய கழிப்பறை வசதிகள் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருப்பதுடன், இவற்றைப் பூட்டி, தலைமையாசிரியர் அறையில் சாவியை வைத்துக்கொள்ளும் நடைமுறை உள்ளது. பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்காக மட்டுமே தனி கழிப்பறை வசதிகள் தொடக்க காலம் முதலாகவே இருக்கின்றன. இந்தக் கழிப்பறைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும். இங்கு மட்டுமே துப்புரவுப் பணியாளர் தினமும் தூய்மை செய்வார். இந்தப் பாகுபாடு, பெரும்பாலான நேரங்களில், மாணவர்கள் எத்தகைய நிலையில் கழிப்பறை வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்ற புரிதலோ, தேவையின் உணர்வோ இல்லாமல் தனித்து மரத்துப்போகும் நிலையை ஆசிரியர்களுக்கு உண்டாக்கிவிடுகிறது.
 இடைவேளையின்போது, ஒரே நேரத்தில் கழிப்பறைகளைப் பயன்படுத்த அனைத்து மாணவர்களாலும் முடியாத நிலையில் அவர்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க நேர்கிறது என்கின்ற உண்மையைப் புரிந்துகொண்டுள்ள கல்வித் துறை, மாணவர்கள் விரும்பும் நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் நடைமுறையை மேற்கொண்டால், மாணவர்கள் திறந்தவெளியைப் பயன்படுத்த மாட்டார்கள் என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
 இருப்பினும் இந்த நடைமுறை தற்போதும்கூட அமலில் இருக்கின்றது, ஆனால் பல ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு நேரத்தின்போது மாணவர்கள் வெளியே செல்வதை விரும்புவதில்லை, அனுமதிப்பதில்லை என்கின்ற உண்மையைப் பள்ளிக் கல்வித் துறை ஏனோ உணர்ந்திருக்கவில்லை. தன் வகுப்பிலிருந்து ஒரு மாணவன் வெளியே சென்றால், அது மாணவர் தன்னை ஏய்க்கும் உத்தியாகவும், தனது கட்டுப்பாடு குறைந்துவிடுவதாகவும் ஆசிரியர் நினைக்கும் அதிகார மனப்போக்குதான் இதற்குக் காரணம்.
 வகுப்பு நேரத்தின்போது அத்தனை மாணவர்கள் மத்தியிலும் ஒரு மாணவன் எழுந்து ஆள்காட்டி விரலை நீட்டி, சமிக்ஞை மூலம் அனுமதி கேட்கும் நடைமுறை அந்த மாணவருக்கு மிகப்பெரும் கூச்சத்தைத் தரக்கூடியது. மேலும், ஒரு ஆசிரியர் வகுப்பு முடிந்து சென்று, இன்னொரு ஆசிரியர் வரும் இடைவெளிக்குள் ஓரிரு மாணவர்கள் கழிவறைக்கு ஒடிச்சென்று திரும்பினாலும், அடுத்த வகுப்புநேர ஆசிரியர் வந்துவிட்டார் என்றால், அவரது கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்கிற தயக்கத்தில் மாணவர்கள் இடைவேளைவரை காத்திருப்பதுதான் அதிகம்.
 ஆசிரியர்கள், தலைமையாசிரியர் ஆகியோரின் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை மாணவர்களுக்காகத் திறக்கப்படுவதும், மாணவர்கள் பயன்படுத்தும் அதே கழிவறைகளைத்தான் ஆசிரியர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமும்,  கழிவறைகளின் தூய்மைக்கு வழிவகுக்கும். கழிப்பறையில் தண்ணீர் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
 அதேபோன்று, வகுப்பறையில் பாடம் நடக்கும் நேரத்தில், ஒரு மாணவன் ஆசிரியரின் அனுமதிக்காக காத்திருக்காமல், ஓசைப்படாமல் வெளியேறி கழிப்பறைக்குச் செல்லவும், மீண்டும் அமைதியாகத் திரும்புவதுமான கலாசாரத்தை தமிழகப் பள்ளிகளில் உருவாக்க வேண்டும். மாணவர்கள் இவ்வாறு வெளியேறுவதை ஆசிரியர்கள் அவமதிப்பாக அல்லது வகுப்புப் புறக்கணிப்பாகக் கருதும் மனநிலையில் மாற்றம் தேவை.
 அக்டோபர் 15 உலக கைகழுவும் நாள். அந்த நேரத்தில் ஒரு வார காலத்துக்கு பள்ளி மாணவர்களிடையே "கைகளைச் சோப்பு போட்டு கழுவினால் நோய்கள் பலவற்றைத் தடுத்துவிடலாம்' என்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஆனால் எந்தப் பள்ளியிலும், மாணவர்கள் கழிப்பறைக்குச் சென்று வந்த பின்னர் கைகழுவத் தண்ணீரே கிடையாது என்கின்றபோது, சோப்பு பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
 மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் புத்தகப் பைகளுடன் ஒரு சோப்பையும் கொண்டுவரச் செய்வது சரியான தீர்வு அல்ல. மிகக் குறைந்த விலையில் சோப்புநீர் தயாரித்து அளிக்க, கதர் கைத்தொழில் வாரியம் போன்ற நிறுவனங்களால் முடியும். மாணவர்களின் தேவைக்காக பொதுவானதொரு இடத்தில் இவற்றை வைத்து, மாணவர்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கலாம்.
 ஒவ்வொரு வகுப்பறைக்கு வெளியேயும் ஒரு கைகழுவும் தொட்டி அமைத்து, தண்ணீர்க் குழாய் அமைத்தால் என்ன? சோப்பு நீரை அந்தந்த வகுப்பு மாணவர்களிடமே கொடுக்கவும், மாணவிகளுக்கான நேப்கின்களை அந்தந்த வகுப்பு மாணவிகளில் ஒருவரிடம் ஒப்படைப்பதும், தலைமைப்பண்பை ஏற்படுத்தும் சிறிய நடைமுறைகள்தானே!
 பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகளை நிறுவுவதும், அதை முறையாகப் பராமரிப்பதும், அதற்குத் தேவையான தண்ணீர் உறுதிப்படுத்தப்படுவதும், நாகரிக வாழ்க்கை முறைக்கு நாளைய தலைமுறையைத் தயார்படுத்தும் முயற்சியின் ஒரு பங்காகத்தான் கருதப்பட வேண்டும். கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில், குறிப்பாக ஊராட்சி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டுமானால், கழிப்பறைகளை நவீனப்படுத்துவது அவசியம். இதில் பழைய மாணவர்கள் பங்களிக்க முன்வருவது அவசியம்.
 ஒவ்வொரு வகுப்புக்குச் செல்லும்போதும் ஆசிரியர்கள் மட்டும் முகம் கழுவி, தெளிவாக வரும்போது, மாணவர்களின் முகம் மட்டும் சோர்வு வழிந்துகொண்டிருக்க வேண்டுமா என்ன? எல்லாவற்றையும் "சாட்டை'யைக் கொண்டா சொல்ல முடியும்?
Dinamani

10/13/2012

நடைமுறையில் உள்ள CPS க்கும் முந்தைய TPF /GPF க்கும் உள்ள வேறுபாடு

பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் : ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகள் என, 300க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி, ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு, நிர்ணயித்த கல்வி கட்டணத்தை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பிற்கு, தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. 
 

கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, நியமிக்கப்பட்ட குழுவிடமே, இதுதொடர்பாக முறையிடலாம் என, உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.  இக்குழு, அனைத்து பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்தது. இதில், அதிருப்தி அடைந்த, 6,400 பள்ளிகள், குழுவின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்தன. இதற்கிடையில், நீதிபதி கோவிந்தராஜன், குழுவில் இருந்து விலகினார். குழுவின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி, ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டார்.  அப்பீல் செய்த பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, கடந்த ஆண்டு ஜூனில், நீதிபதி, ரவி ராஜ பாண்டியன் குழு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், 318 தனியார் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகள் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தன. இம்மனுக்களை நீதிபதிகள் பானுமதி, விமலா அடங்கிய, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. பின், தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகள் என, 318 பள்ளிகளுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு, நிர்ணயித்த கட்டணத்தை ரத்து செய்தது. இந்த பள்ளிகளுக்கு வரும், டிசம்பர் மாதத்திற்குள், புதிதாக கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதேநேரத்தில், 2010 -11 மற்றும் 2012-13ம் கல்வி ஆண்டுகளுக்கு, ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு, ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக, 15 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். இது ஒரு இடைக்கால ஏற்பாடு என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, டி.ஏ.வி., மேல் நிலைப்பள்ளி சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், கூறப்பட்டிருந்ததாவது: சென்னை, ஐகோர்ட் அளித்த தீர்ப்பு, பள்ளி கட்டணம் தொடர்பான, சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது. அரசு உதவி பெறாத சுய நிதி பள்ளிகளில், ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் அல்லாதவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சம்பளம் தொடர்பாக, பிறப்பித்துள்ள உத்தரவுகளும் கடுமையாக உள்ளன. அதேநேரத்தில், கல்வி கட்டணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு, தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. பள்ளிகளின் பல்வேறு செலவுகளை, அந்தக் குழு கவனத்தில் கொள்ளவில்லை.  ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவும், அது தெரிவித்த வழிகாட்டிக் குறிப்புகளும், கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளன. எனவே, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அதற்கு முன்னதாக, அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, டி.ஏ.வி., பள்ளி மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த, நீதிபதிகள், சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட குழு தொடர்ந்து செயல்படும். மனுதாரர்கள், தங்களின் பிரச்னைகளை, அந்தக் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரத்தில், "பள்ளிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த, ஐகோர்ட் கருத்து மட்டும் இவ்வழக்கில் பரிசீலிக்கப்படும்' என்றும் குறிப்பிட்டனர்.

டி.இ.டி., தகுதித் தேர்வு - வெற்றி ரகசியங்கள்

நாளை டி.இ.டி., மறு தகுதித் தேர்வு நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற சில ஆலோசனைகள்:
 
 
* நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிப் பாடமான தமிழையும், விருப்பப் பாடமான, அறிவியல் அல்லது சமூக அறிவியல், விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், நிழலிட்டு காட்டுவது அவசியம்.
* மறுதேர்வு எழுதுவோருக்கு, புதிய பதிவெண் வழங்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொள்ளவும்.
* தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள், அதே பெயரில் கிளைகளை கொண்டிருப்பதால், மையம் எது என்பதை முதல் நாளே உறுதி செய்யுங்கள்.
* போட்டோ இல்லாமல் ஹால் டிக்கெட் வந்திருந்தால், அரசிடம் பதிவு பெற்ற அலுவலரிடமிருந்து பெறப்பட்ட, போட்டோ ஒட்டிய, தற்காலிக அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள்.
* விடைத்தாளில், ஒன்றன் பின்ஒன்றாக விடையளிப்பதே நல்லது. தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளித்து, தெரியாதவற்றுக்கு பின்னர் விடையளிக்கலாம் என, நினைப்பது சரியல்ல; விடைத்தாள், ஓ.எம்.ஆர்., தாளாக இருப்பதால், கவனக் குறைவாக, வரிசை மாறிவிட வாய்ப்புண்டு; எல்லா விடைகளுமே தவறாகும் அபாயம் நிகழலாம்.
* வினாக்களின் ஆங்கில வடிவத்தையும் படிப்பது அவசியம். வினாக்கள், ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டு, பின்னரே தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன.
* வினாத்தாள் தொகுப்பு, அனைத்து விருப்பப் பாடங்களையும் உள்ளடக்கியதாகத் தரப்படுகிறது. சமூக அறிவியல், அறிவியல் வினாக்களை கவனித்து தேர்ந்தெடுக்க வேண்டும். சமூக அறிவியல், அறிவியலில் சில பாடங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருப்பதால், விருப்பப் பாட வினாப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில், கடந்த தேர்வில் சிலர் குழம்பினர்.
* கணித வினாவுக்கு, முழுக் கணக்கையுமே செய்து பார்க்க வேண்டியதில்லை. கொடுக்கப்பட்டுள்ள, "ஆப்ஷன்'களில், வினாவுக்கு சற்றும் பொருந்தாத இரண்டு விடைகளை, "டெலிஷன் மெத்தடு' - நீக்கல் முறையில் நீக்கிட வேண்டும். மீதமுள்ள இரண்டு, "ஆப்ஷன்'களில் எது சரி எனக் கண்டுபிடிக்க, சில, "ஸ்டெப்ஸ்'கள் போட்டால் போதும். நெருக்கமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதிவிட்டு, அடுத்த வினாவுக்கு சென்று விடலாம்.
* நேர மேலாண்மை அவசியம். ஒரே கேள்விக்கு விடையளிக்க நீண்ட நேரம், யோசிக்காதீர்.

10/12/2012

உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு

உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு கூடுதல் பட்டியல் வரிசை எண் 967 முதல்1593 வரை உள்ளவர்கள் கலந்தாய்வுக்கு அழைப்பு .

தமிழ்நாடு முழுவதும் 14-ந்தேதி ஆசிரியர் தகுதி தேர்வு 1094 மையங்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

சென்னை, அக்.12-

தமிழ்நாடு முழுவதும் 14-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 1094 மையங்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.



ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர்கள் பி.எட். படித்திருந்தாலும், இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாலும் தனியாக ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஜுலை 12-ந் தேதி நடத்தப்பட்டது. அப்போது 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். ஆனால் தேர்வு நேரம் 11/2 மணிநேரம் கொடுக்கப்பட்டதால் விடை அளிக்க போதிய நேரம் இல்லை என்று தேர்வு எழுதியவர்கள் சரமாரியாக புகார் அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் கேள்விகள் மிக கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் சொன்னது சரியாகவே இருக்கும் வகையில் 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது 150 மார்க்குக்கு 90 மார்க் எடுத்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள்.

இந்த பிரச்சினை காரணமாக இப்போது மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக தனி கட்டணம் வசூலிக்கவில்லை. கடந்த முறை எழுதியவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் புதிதாக தேர்வு எழுத விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி புதிதாக பலர் விண்ணப்பித்தனர்.

ஹால்டிக்கெட் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அது ஒருவேளை கிடைக்காவிட்டால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பத்தின் எண்ணை அடித்து ஹால்டிக்கெட்டை பெற்று தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

14-ந் தேதி நடக்கிறது

தேர்வு 14-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடக்க உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1094 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 6 லட்சத்து 75 ஆயிரத்து 643 பேர் எழுதுகிறார்கள்.

அவர்களில் இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 52 ஆயிரத்து 298 பேர்கள் எழுதுகிறார்கள். அவர்களில் 61 ஆயிரத்து 34 பேர் ஆண்கள். 1 லட்சத்து 91 ஆயிரத்து 264 பேர் பெண்கள்.

அதுபோல பி.எட். படித்தவர்ளுக்கான 2-வது தாள் தேர்வை 3 லட்சத்து 64 ஆயிரத்து 452 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 426 பேர் ஆண்கள். 2 லட்சத்து 54 ஆயிரத்து 26 பேர் பெண்கள். இந்த இரு தேர்வையும் சேர்த்து 58 ஆயிரத்து 643 பேர் எழுதுகிறார்கள். அவர்கள் பி.எட். மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களாக இருப்பார்கள்.

ஏற்பாடு

தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, உறுப்பினர் செயலாளர் அன்பழகன், உறுப்பினர் கே.அறிவொளி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மார்க் எடுப்பவர்களுக்கு ஆசிரியர் வேலை காத்திருக்கிறது. கேள்விகள் எளிதாக கேட்கப்படும் என்றும் 30 ஆயிரம் பேர்களுக்கு மேல் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.

அஞ்சல் வழி கற்கும் பாடங்களில் அங்கீகரிக்கப்படுபவவை எவை?: அரசு விளக்கம்

சென்னை: அஞ்சல் வழியாக கற்கும் பாடங்களில் அரசு பணி நியமனத்தின்போது ஏற்றுக் கொள்ளக் கூடிய படிப்புகள் எவை என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் எம்.ஏ. (இங்கிலீஷ் மற்றும் கம்யூனிகேஷன்) படிப்பு, அரசு பணி நியமனத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்புக்கு சமமான படிப்பாக கருதப்படும்.
- கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்குகிற எம்.ஏ. அப்ளைடு சைக்காலஜி, கவுன்சிலிங் மற்றும் கைடன்ஸ் படிப்பு, மருத்துவக் கல்விப்பணியில் உதவி பேராசிரியர் மற்றும் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியான முதுநிலை உளவியல் படிப்புக்கு இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.
 

- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. அப்ளைடு எக்கனாமிக்ஸ் படிப்பு, எம்.ஏ. பொருளாதாரம் படிப்புக்கு சமமாக கருதப்படும்.
- கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி மற்றும் பிளான்ட் பயோடெக்னாலஜி படிப்பானது, பி.எஸ்சி. தாவரவியல் படிப்புக்கு இணையானதாகவும், இதே பல்கலைக்கழகத்தின் பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா படிப்பு, பி.ஏ. வரலாறு பட்டப் படிப்புக்கு சமமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பி.லிட் (தமிழ்) படிப்பு, சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட். (தமிழ்) படிப்புக்கு இணையானதாகவும், இதே பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. அப்ளைடு சைக்காலஜி படிப்பானது, எம்.ஏ. சைக்காலஜி படிப்புக்கு சமமாகவும் கருதப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்காதீர்:கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார். மதுரை டிவிஎஸ் மெட்ரிக். பள்ளியில் மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
 எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக அளவாக ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் எவ்வித சிரமமும் அடையக் கூடாது என்பதற்காக பாடப்புத்தகங்களில் இருந்து அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா இலவசமாக வழங்கி வருகிறார். வேறெந்த துறைக்கும் இல்லாத சிறப்பு, சமூகத்தை நல்வழிப்படுத்தக் கூடியதாக பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அதன் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.
 இத்தகைய துறையில் பணியாற்றக் கூடிய ஒவ்வொருவரும் அதே ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்ற வேண்டும். அரசின் திட்டங்கள் மாணவர்களை முழுமையாகச் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள் அனைத்தும் நூறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை அடைய ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதியேற்க வேண்டும்.
 சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் ஏராளமாக வருகின்றன. இனிவரும் காலங்களில் பள்ளிகளில் எவ்விதப் புகாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது.
 ஆசிரியர்களின் வருகையை, அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கல்வித் துறை அலுவலர் ஆசிரியர்களை நல்ல முறையில் நடத்துவது அவசியம் என்றார்.
 பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபீதா, மதுரை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, பள்ளிக் கல்வி இயக்குநர் கு.தேவராஜன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சு.நாகராஜமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

 தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அ.கருப்பசாமி நன்றி கூறினார்.
 ஆய்வுக் கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் சிறந்த பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் கேடயங்களை வழங்கினார்.
 மாணவர் சேர்க்கை, கல்வித் தரத்தை மேம்படுத்துவது, ஆங்கில வழிப் பிரிவு துவக்கம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்துவது, மாணவர்கள்-ஆசிரியர் தகவல் தொகுப்பு, அலுவல் நடைமுறைகள் உள்ளிட்ட அறிவுரைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைச் செயலர் சபீதா வழங்கினார்.

10/11/2012

Equivalence committee resolution EQUIVALENT for many UG & PG degree

மைசூர் நிறுவனத்துக்கு செல்லும் எஸ்.எஸ்.ஏ., பள்ளி வளர்ச்சி நிதி: ஆசிரியர், கிராம கல்வி குழு எதிர்ப்பு

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழுள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து, மைசூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு தலா ரூ.2 ஆயிரம் "டிடி' அனுப்ப வேண்டும்' என்ற உத்தரவுக்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம கல்வி குழு உறுப்பினர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநிலத்தில் 2009லிருந்து ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் பராமரிப்பு நிதி ரூ.7,500, வளர்ச்சி நிதி ரூ.8 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிதி மூலம் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகள், பணிகள் மேற்கொள்ளப்படும். எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படும் அனைத்து பள்ளிகளும் இந்நிதியில் கர்நாடக மாநிலம் மைசூர் "லியோ லிட்டரேச்சர் அன்ட் சில்டரன் மெட்டீரியல்ஸ் பேங்க்' பெயருக்கு, தலா ரூ.2 ஆயிரம் "டிடி' எடுத்து அனுப்ப வேண்டும், என்ற உத்தரவு, மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. என்ன காரணத்துக்காக என்ற விவரம் தெரியவில்லை என, தலைமையாசிரியர்கள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள் புலம்புகின்றனர். எஸ்.எஸ்.ஏ., பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: எந்த தகவலும் தெரிவிக்காமல் மைசூர் முகவரிக்கு ரூ.2 ஆயிரம் அனுப்ப மட்டும் உத்தரவு வந்தது. மாணவர்களுக்கு கற்றல் "மெட்டீரியல்ஸ்'க்காக இத்தொகை அனுப்பப்படுவதாக கூறுகின்றனர். அப்படி பார்த்தால், இதற்குமுன் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் புத்தகங்கள் பெற, கோவை நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் "டிடி' அனுப்பினோம். கல்விக்கான "மெட்டீரியல்ஸ்' அனைத்தும் தமிழகத்தில் கிடைக்கும்போது, தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா மாநில நிறுவனம் மீது மட்டும் எதற்கு இந்த பாசம், என்றனர்.

இலவச மையத்தில் 76 பேர் குரூப் 4 தேர்வில் வெற்றி

விருதுநகரில் செயல்படும் அரசு ஊழியர்கள் சங்க இலவச பயிற்சி மையத்தில் படித்த 76 பேர், குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகரில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம்செயல்படுகிறது. இங்கு அனைத்து போட்டி தேர்வுகளுக்கும், இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள குரூப் 4 தேர்வில், இங்கு படித்த 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு ஊழியர்கள் சங்கத்தினரே பயிற்சியாளர்களாக உள்ளனர். இது வரை 405 பேர்,போட்டி தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டு, பணிகளுக்கு சென்றுள்ளனர்.

10/10/2012

நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் களப்பயிற்சிகள்அளிக்கப்படும்

நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் கீழ்க்காணும் களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
1) உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் - 4 வாரங்கள்
2) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் - 2 வாரங்கள்
3) அனைவருக்கும் கல்வித் திட்டம் - 3 நாட்கள்
4) அரசு ஆசிரியர் பயிற்சி மையம் - 3 நாட்கள்
5) தொடக்கப் பள்ளிகள் - 2 வாரங்கள்
6) நடுநிலைப் பள்ளிகள் - 2 வாரங்கள்
7) தொடக்கக் கல்வி இயக்ககம் - 1 வாரம்

குரூப் 2 முறைகேடு வழக்கு: 8 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி

குரூப் 2 வினாத்தாள் அவுட்டான வழக்கில் கைதான எட்டு பேரின் ஜாமீன் மனுக்களை தர்மபுரி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. தேர்வு வினாத்தாள் அவுட்டானது. இதை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்ட தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், 12 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் கைதான ரங்கராஜன், விவேகானந்தன், பிரபாகரன், பூபேஷ், சுரேஷ் உள்ளிட்ட எட்டு பேர் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வணங்காமுடி, எட்டு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி: "ரேங்க்' பட்டியல் மாறுகிறது

ஆசிரியர் தகுதி தேர்வு என, அழைக்கப்படும் "டி.இ.டி.,' தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், "ரேங்க்' பட்டியல், புதிய விதிமுறைகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம், பணி நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்தது. அதன்படி, புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, புதிய, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனால், தேர்வு பெற்றவரின், ரேங்க் இடம் மாறலாம்; ஆனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தேர்வுப் பட்டியல், ஓரிரு நாளில் வெளியிடப்படும்.புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும், சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும்  வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையிலேயே (டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்) நடக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீடு- மத்திய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியம், காப்பீடு பொதுத்துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி குழு தலைவர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன பொது செயலாளர் முத்துசுந்தரம், மாநில செயலாளர் அன்பரசு பேசினர்.


எழிலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி குழு தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வெற்றிராஜன், மாவட்ட செயலாளர் டேனியல்ஜெயசிங் பேசினர். வணிகவரித்துறை அலுவலகத்தில் பகுதி குழு செயலாளர் சந்திரன் தலைமையிலும், கிண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பகுதி குழு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், டிபிஐ அலுவலகத்தில் பகுதி குழு பொருளாளர் வினோத் தலைமையிலும் ஆர்ப் பாட்டம் நடந்தது.  கலெக்டர் அலுவலகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

10/09/2012

அரசு பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் எஸ்.எம்.எஸ். வருகைப் பதிவேடு முறை


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகை குறித்து, பதிவு செய்ய, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி முறையை அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், காலை 9:30 மணிக்கு, பள்ளிக்கு வந்த ஆசிரியர்களின் வருகை குறித்து, அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிப்பர். இது கம்ப்யூட்டர் மூலம் ,தானாகவே கல்வி துறை அலுவலகத்தில் பதிவாகிவிடும்.ராமநாதபுரம்: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் வருகையை, எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
 

ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் வருகை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள "பாஸ்வேர்ட்&' மூலம் கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதே போல், கல்வி துறை இயக்குனர் வரை கொடுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட் மூலம், தமிழகத்தில் எந்த ஊரிலும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வருகை குறித்து, சென்னையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
"இம்முறை தற்போது தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வரஉள்ளது&' என கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

TNPSC Results - Posts included in Group-IV Services for the years 2007-2008 to 2012-2013

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
 
 ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்து
 கிறது.
 ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.
 இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
 தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.
 அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.
 இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
 இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.
 அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 
 அதன் விவரம்:
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).
 பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 
 இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்
 படுகிறது. 
 இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
 
 வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
 இடைநிலை ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
 90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10
 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42

தனியார் பள்ளிகளுக்கு 9% கட்டணம் அதிகரிப்பு

சென்னை : "தனியார் பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு, 9 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம்" என, கட்டண நிர்ணய குழுத் தலைவர், சிங்காரவேலு கூறினார். அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 

சென்னையில், @நற்று அவர் கூறியதாவது: இதுவரை, 1,000 பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளோம். புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், 400 பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்தப் பள்ளிகளுக்கு, டிசம்பருக்குள், புதிய கட்டணம் நிர்ணயிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது.
முதல் கட்டமாக, 200 பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து விட்டோம். இம்மாத இறுதிக்குள், கட்டண விவரம், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். மீதமுள்ள, 200 பள்ளிகளிடம், விசாரணை நடந்து வருகிறது.
நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பரிலோ, அந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரம் வெளியிடப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணங்களை, தனித்தனியே அட்டவணையிட்டு வழங்குகிறோம்.
விலைவாசி உயர்வு, சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு, 9 சதவீதம் வீதம், கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம். "ஸ்மார்ட் வகுப்புகள்&' நடத்துவதாக கூறி, பல பள்ளிகள் தனியாக கட்டணம் வசூலித்து வந்தன.
தற்போது, அந்த வகுப்புகளுக்கும் சேர்த்தே, கட்டணம் நிர்ணயிக்கிறோம். எனவே, இனி, அதற்கென தனி கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளன.
கூடுதல் கட்டணங்களை திருப்பி வழங்கியதற்கான ஆவணங்களை காட்டாவிட்டால், மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டு, உறுதி செய்து கொள்கிறோம். இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.

GO Published for TRB - Committee Recommendations for Appointment of Secondary Grade Teacher & Graduate Teacher