சென்னை: ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்க இருக்கிறது. இந்த பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நிதி; செங்கோட்டையனுக்கு விவசாயம்; நத்தம் விஸ்வநாதனுக்கு மின்சாரம்; சண்முகத்திற்கு பள்ளி கல்வி; செல்லூர் ராஜுவுக்கு கூட்டுறவு; கோகுல இந்திராவுக்கு வணிகவரி; கருப்பசாமிக்கு கால்நடை; சண்முகநாதனுக்கு அறநிலையத்துறை; முனுசாமிக்கு உள்ளாட்சி; பழனியப்பனுக்கு உயர்கல்வி; வேலுமணிக்கு சிறப்புத் திட்ட செயலாக்கம்; சண்முக வேலுவுக்கு தொழி்ல்; சம்பத்திற்கு ஊரகத்துறை; வைத்யலிங்கத்திற்கு வீட்டு வசதி; உதயகுமாருக்கு தகவல் தொழில்நுட்பம்; தங்கமணிக்கு விவசாயம்; பச்சைமாலுக்கு வனத்துறை; மரியம் பிச்சைக்கு சுற்றுச்சூழல்; எடப்பாடி பழனிசாமிக்கு நெடுஞ்சாலைத்துறை; சின்னையாவுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலன்; ஜெயபாலுக்கு மீன்வளத்துறை; புத்தி சந்திரனுக்கு சுற்றுலாத்துறை; செல்லபாண்டியனுக்கு தொழிலாளர் நலன்; அக்ரி கிருஷணமூர்த்திக்கு உணவு; வி.எஸ்.விஜய்க்கு மக்கள் நல வாழ்வு; தங்கமணிக்கு வருவாய்ததுறை; ராமலிங்கத்திற்கு பொதுப்பணித்துறை; செந்தமிழனுக்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு; ரமணாவுக்கு கைத்தறி; ராமஜெயத்திற்கு சமூக நலன்; சுப்பையாவுக்கு சட்டம்; செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்து இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அரசியல் செய்திகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக