பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/18/2011

14 வயது மாணவி பலாத்காரம்-குமரி போலீஸ் அதிகாரியிடம் தீவிர விசாரணை

நாகர்கோவில்: கேரளாவில் 14 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குமரி மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடந்துள்ளது.

எர்ணாகுளத்தை சேர்ந்த 14 வயது மாணவியை அவரது தந்தையே விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் மாணவியை பலத்காரம் செய்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சில அதிகாரிகள், விஜபிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த கான்ட்ரக்டர் மணிகண்டனை கைது செய்தனர்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மற்றும் நெடுஞ்சாலை துறை, பொதுபணி்துறை அதிகாரிகள் பலருக்கு மணிகண்டனுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களில் சிலர் மணிகண்டனின் உதவியோடு மாணவியை பலத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது.

மணிகண்டன் அளித்த வாக்குமுலத்தின்படி முதல் கட்டமாக 2 போலீஸ் அதிகாரிகள் இதில் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் முதல் பட்டியில் உள்ளவர்களில் 15 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் குமரி மாவட்ட அதிகாரிகளும் அடங்குவர்.

மொத்தம் 5 கேரள தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு தனிப்படை போலீசார் குமரி மாவட்டம் வந்துள்ளனர். மணிகண்டன் வாக்குமூலத்தில் தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. இதற்கிடையே மணிகண்டனுடன் தொடர்பு வைத்திருந்த அதிகாரிகள் பலரும் கலக்கத்தில் உள்ளனர். அவர்களில் பலர் இப்போது வெளி மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக