சென்னை:ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடக்க உள்ளது.ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், ஆதிதிராவிர் நல ஆணையரக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது.இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல், 23ம் தேதி காலை 10 மணிக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல், அன்று 11.30 மணிக்கும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல், 23ம் தேதி பிற்பகல் 1 மணிக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் பிற்பகல் 3.30 மணிக்கும் நடக்க உள்ளது.இது தவிர, 24ம் தேதியன்று, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கவுன்சிலிங் பாடம் வாரியாக காலை 10 மணி முதல் நடக்க உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக