தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக டி.உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் என அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் உதயசந்திரன். பொறுப்பேற்கும் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் அதிகாரி என தலைமைச் செயலகம் உள்பட பல்வேறு இடங்களிலும் அவருக்கு நற்பெயர் உண்டு. அவர் இப்போது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குரூப் 1, குரூப் 2 போன்ற அரசுத் துறைகளுக்கு தேர்வுகளை நடத்துவது, தேர்வு பெறும் தேர்வர்களுக்கு நேர்காணல்களை மேற்கொள்வது போன்ற முக்கிய பணிகள் செயலாளரின் கண்காணிப்பில் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா இருந்தார். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அந்தப் பொறுப்பில் இருந்ததால் மாற்றப்பட்டார். அவர் மாற்றப்பட்டு ஓரிரு நாட்களிலேயே தேர்வாணையத்துக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக