சென்னை : ""வருமான வரி, "ரிட்டன்' தாக்கல் செய்ய, வரும் 28ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், 55 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன,'' என்று சென்னை வருமான வரி முதன்மை கமிஷனர் பிரேமா மாலினி வாசன் கூறினார்.
சிறப்பு கவுன்டர்கள் திறப்பு மற்றும் வருமான வரி "ரிட்டன்' புதிய படிவம் அறிமுகம் குறித்து, சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில், பிரேமா மாலினி வாசன் கூறியதாவது: வருமான வரி, "ரிட்டன்' படிவம், இவ்வாண்டு, "சகஜ்' என்ற பெயரில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்படிவம் சிவப்பு நிறத்தில், "ஸ்கேன்' செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படிவம், முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வருமான வரி, "ரிட்டன்' தாக்கல் செய்வோர், சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கணக்கிடுதலுக்கு வருமான வரி படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள, "ஒர்க் சீட்'டை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இப்படிவத்துடன் எந்த ஒரு ஆவணத்தையும், இணைக்க வேண்டியதில்லை. படிவத்தின் தாள்கள், "ஸ்டேப்பிள்' செய்து தரப்பட்டுள்ளன. மேலும், "ஸ்டேப்பிள்' செய்வதோ, கட்டுவதோ தேவையில்லை. படிவத்தின் தாள்களில் உள்ள, "பார் கோடு' சேதமடைந்து விடும். "பார் கோடு' சேதமடைந்தால், தாள்களை, "ஸ்கேன்' செய்வது சிரமம்.
படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் மட்டுமே எழுத வேண்டும். மற்ற இடங்களில் எழுதக் கூடாது. படிவத்தை மடக்கவும் கூடாது. படிவத்தில் (2ம் பக்கம்) ட்டி.டி.எஸ்., விவரங்களை பூர்த்தி செய்யும் போது, தாள் போதவில்லை என்றால், படிவத்துடன் இணைக்கப்பட்ட துணைத் தாள்களை பயன்படுத்திக் கொள்ளலாம். "சகஜ்' படிவத்தில் கறுப்பு, வெள்ளையிலான நகல்களை பயன்படுத்தக் கூடாது.
ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறும் சம்பளதாரர்களுக்கு, வருமான வரி, "ரிட்டன்' தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிலக்கு, 2010-2011 நிதியாண்டு முதல் அமலாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் சம்பளதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். சம்பள வருமானத்துடன், வங்கி சேமிப்புக்கான வட்டி, 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். சம்பளதாரர், தன் வருமானம் பற்றிய அனைத்து விவரங்களையும், அவருக்கு சம்பளம் பட்டுவாடா செய்யும் அதிகாரியிடம் தெரிவித்து, அதற்குண்டான முழு வரியையும் செலுத்திவிட வேண்டும்.
ஒரு நபர், இருவேறு நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தாலும், சம்பளத்தைத் தவிர வேறு வருமானம் பெற்றாலும், மேலும், "ரீபண்ட்' வரவேண்டியிருந்தாலும், வருமான வரி, "ரிட்டன்' தாக்கல் செய்ய வேண்டும். சம்பளதாரர் மற்றும் வியாபார வருமானம் (தணிக்கை உட்படாத கணக்கு) பெறுவோர் வருமான வரி, "ரிட்டன்' தாக்கல், வரும் 31ம் தேதிக்குள் செய்துவிட வேண்டும்.
வருமான வரி, "ரிட்டன்' தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், வரும் 28ம் தேதியிலிருந்து, 31ம் தேதி வரை 55 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன. இதில், 40 கவுன்டர்களில் வருமான வரி, "ரிட்டன்' தாக்கல் செய்யலாம். மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு தனியாக இரண்டு கவுன்டர்கள் திறக்கப்படும்.
பான்கார்டு எண் பிரச்னையை சரி செய்து கொள்ள, மற்ற கவுன்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வரி குறைவாக கட்டியோர், பாக்கி வரியை செலுத்த ஏதுவாக, வங்கி கவுன்டரும் இங்கு திறந்திருக்கும். தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் வருமான வரி அலுவலகத்தில், "ரிட்டன்' தாக்கல் செய்வோரும், இதை பயன்படுத்திக் கொள்ளலாம். தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் அலுவலகங்களிலும், "ரிட்டன்'கள் தொடர்ந்து பெறப்படும். இக்கவுன்டர்கள், காலை 9.45 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். இவ்வாறு பிரேமா மாலினி வாசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக