பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/20/2011

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல்

 

சென்னை:  இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், மற்ற இனத்தவரைப் போல சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை வந்துள்ள அமெரி்க்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று முன்தினம் டெல்லி வந்திறங்கினார். நேற்று அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார்.

பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

இன்று அவர் தனி விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அவர் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் மாணவர்களை சந்தி்த்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் இந்திய மாணவர்களை மனதார வரவேற்கிறோம்.

இந்தியா-அமெரி்ககா இடையேயான உறவு பலமாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தீவிரவாதத்தை அழிக்கப் பாடுபடுவோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை:

தமிழகத்தில் தமிழர்கள் அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்பது பாராட்டுக்குரியது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சி மிகப் பெரியது. வாய்ப்பு தேடி அமெரிக்கர்கள் இந்தியாவைத் தேடி வரும் சூழல் வந்துள்ளது.

பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம். உலக அரங்கில் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது.

இந்தியா தேர்தல் நடத்துவதில் மிகவும் புகழ் பெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தி்ன் பங்கு மிகப் பெரியது. இதேபோன்று எகிப்து, ஈராக் நாடுகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட இந்தியா உதவ வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரி்கக அதிபர் ஒபாமா ஆதரவாக உள்ளார். உலக அளவில் அணு ஆயுத பரவலைத் தடுக்கும் முக்கிய பங்கு இந்தியாவுக்கு உண்டு என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக