சென்னை, ஜூலை 19-
சமச்சீர் கல்வி குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் தி.கண்ணன், மாநி லப்பொருளாளர் ச.மோசஸ், பொதுச்செயலாளர் (பொறுப்பு) முருக.செல்வராசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் நடப்புக் கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடநூல் முறையினை அமல்படுத்திட வேண்டும்; ஜுலை 22 ஆம் தேதிக்குள் பாடநூல்களை மாணாக்கர்களுக்கு வழங்கிட வேண்டும்; பாடத்திட்ட தர ஆய்வுக்குழுவின் பரிந்துரை களை ஏற்று 3 மாதங்களுக்குள் பாடநூலில் மாற்றங்கள், திருத் தங்களை செய்திடலாம்; தேவைப் பட்டால் துணைப்பாடநூல்கள் வழங்கிடலாம்- என்று கூறி யுள்ள சென்னை உயர் நீதிமன் றம், தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்திருத்த மசோதா வினை ரத்து செய்தும் ஆணை யிட்டுள்ளதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி பெரிதும் வரவேற்கிறது.
தமிழ்நாட்டின் கோடிக் கணக்கான மாணாக்கர்களின் கல்விநலனை கருத்தில் கொண் டும், வாக்களித்துள்ள தமிழ் நாட்டு வாக்காளர்களின், தமிழ் நாட்டின் பொது மக்களின் மன உணர்வுகளை கணக்கில் கொண்டும் இந்திய உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும் முடிவினை தமிழக அரசு முற்றாக கைவிடுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி வேண்டுகிறது. தமிழ்நாட்டின் பள்ளிவயது குழந்தைகள் மனப்பதற்ற மின்றி, எதிர்காலம் குறித்து அச்சமின்றி, மகிழ்வுடன் பொதுப்பாடநூலில் கல்வி கற்றல் செயல்பாடுகளில் ஈடு படத் தக்க வகையில் வழி வகை செய்திட வேண்டும் என்றும், முழுமையான சமச் சீர் கல்வி முறையினை நடப் புக்கல்வி ஆண்டிலேயே நடை முறைப்படுத்திட அனைத்து வகையான நடவடிக்கைகளை யும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசினை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொள்கிறது.
இடைநிலை ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மா.குமரே சன் விடுத்துள்ள அறிக்கை:
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டு மென்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ளது. இந்த தீர்ப்பை தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.
தமிழக அரசு, மாணவர்கள் நலன் கருதி இத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டு உடனடியாக புத்தகங்களை வழங்கி வகுப்பு களை தொடர்ந்திட நடவ டிக்கை எடுத்திட வேண்டு மெனவும், மேல் முறையீடு என்ற பெயரில் காலதாமதம் செய்யாமல் மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கா மல் சமச்சீர் கல்வியை உடன டியாக அமல்படுத்த வேண்டு மெனவும் தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்கம் கேட் டுக் கொள்கிறது. நன்றி: |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக