சென்னை:சமச்சீர் கல்வியை அமல்படுத்த சென்னை ஐகோர்ட் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக, ஏற்கனவே 2010ம் ஆண்டு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகளில் சில பகுதிகளை, முந்தைய அரசு பின்பற்றவில்லை. அந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான், சமச்சீர் கல்வி சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வந்தது.
இதில், எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது.சமச்சீர் கல்வி திட்டம் என்பது வெறும் பாடத்திட்டத்துடன் முடிந்துவிடுவதல்ல. தரமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், தேர்வுகள், ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகள், மாணவர்களுக்கான விதிமுறைகள் என பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி தேவைப்படுகிறது. இதையெல்லாம் மனதில்கொண்டு தான், நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என அரசு முடிவெடுத்து, மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்து, சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தது.
இந்த கருத்தை ஐகோர்ட் ஏற்றிருக்க வேண்டும். அப்படி ஏற்காமல், இந்த ஆண்டே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. எனவே, ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்வதுடன், ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறும்போது,"மனு மீது நாளை (21ம் தேதி) விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.
நன்றி: இதில், எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது.சமச்சீர் கல்வி திட்டம் என்பது வெறும் பாடத்திட்டத்துடன் முடிந்துவிடுவதல்ல. தரமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், தேர்வுகள், ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகள், மாணவர்களுக்கான விதிமுறைகள் என பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி தேவைப்படுகிறது. இதையெல்லாம் மனதில்கொண்டு தான், நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என அரசு முடிவெடுத்து, மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்து, சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தது.
இந்த கருத்தை ஐகோர்ட் ஏற்றிருக்க வேண்டும். அப்படி ஏற்காமல், இந்த ஆண்டே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. எனவே, ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்வதுடன், ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறும்போது,"மனு மீது நாளை (21ம் தேதி) விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக