கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றும் சட்டத்தில் திருத்தம் செய்து நீதிமன்ற நேரத்தை விரயம் செய்துவிட்டதாகவும் சமச்சீர் கல்வி வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் இன்று 2வது நாளாக தமிழக அரசு வழக்கறிஞர் பி.வி.ராவ் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்று கேட்டனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் சட்டத் திருத்தம் ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ், கல்வி, சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தகுதியான நபர்கள் இல்லை என்றார்.
அவ்வாறு ஆலோசனைகள் வழங்காததால் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது என்றும் ராவ் வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 2011ஆம் ஆண்டோ அதற்கு பிறகோ அமல்படுத்தலாம் என்று கூறியதை ராவ் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அளித்த தீர்ப்பை புரிந்து கொள்ளலாம் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்துவிட்டது என்றார்.
தமிழக அரசு மீதே அரசு வழக்கறிஞர் கூறிய புகாரால் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாதிட்ட வழக்கறிஞர் ராவ், சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்றார்.
அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ அமல்படுத்தலாம் என்று அரசின் வாதம் தொடர்ந்து நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக