வாஷிங்டன்: "போலி விசா மற்றும் ஆவணங்களை விற்கும் தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்கவேண்டும்," என்று அமெரிக்கா வரும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்ந்த மோசடியில் அமெரிக்காவிலுள்ள நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைகழகம் சிக்கியுள்ளது. இங்கு விதிமுறைகளை மீறி மாணவர்கள் சேர்க்கப்படிருந்ததை அந்நாட்டு புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், அந்த பல்கலைகழகத்தில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த பல்கலைகழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் வேறு பல்கலைகழகத்தில் சேர்ந்துகொள்ள அனுமதி அளிப்பதாக அமெரிக்க அரசு உறுதி கூறியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா வந்து படிக்க திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் விசா தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு எச்சரித்துள்ளது. இதுபோன்ற, மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:
"மோசடி விசா சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளது.
விசாரணை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் கூற இயலாது. மோசடி விசா மற்றும் போலி ஆவணங்களை விற்கும் தரகர்களிடம் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அமெரிக்கா வர திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் மோசடி விசா வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம்," என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக