புதுடில்லி : இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு விரைவில் நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபில் தெரிவித்துள்ளார். இதற்கு 80 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் தமிழக அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருவது ஆச்சர்யத்தை தருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2013ம் கல்வியாண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக