திண்டுக்கல், ஆக. 18: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று காலை 8.45 மணி அளவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜனுக்கு தொலைபேசியில் இந்த மிரட்டல் வந்துள்ளது. இதை அடுத்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவுடன் போலீசார் தற்போது பள்ளியில் சோதனை மேற்கொண்டுள்ளனர். எனவே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக