சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும், 2014-15ம் ஆண்டிற்கான நேர்காணலுக்கு ஏப்.1 முதல் ஜுன் 30ம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு நேரில் வர வேண்டும். ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், சமீபத்தில் எடுத்த புகைப்படம் இரண்டு, வருமானவரி வரம்பிற்குள் வரும் ஓய்வூதியர்கள் பான் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். முகவரி மற்றும் செல்போன் எண் அல்லது தொலைபேசி எண்ணை கருவூல அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக